rp

Blogging Tips 2017

CBSE பாடத்திட்டம் போல் தயாராகிறது சமச்சீர் பாடத்திட்டம்!

மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில், சி.சி.இ., என்ற செயல்முறை வழி கற்றல் அமல்படுத்தப்படுகிறது.அதேநேரம், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வரையிலான மாணவர்களுக்கு, சிறப்புப்பாடங்களும் நடத்தப்படுகின்றன.இவற்றில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கைவினை போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இதற்காக, 22 ஆயிரம் ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஆனால், இந்த ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் சரியாக வழங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் காணாமல்

ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு
விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது.

அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், கடைகளை மூடும்படியும், வாகனங்களை நிறுத்தும்படியும், கட்சி தொண்டர்கள் வற்புறுத்துவர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, நாடு முழுவதும், மக்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று, அவரது இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி, அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது.இன்று, பள்ளிகள், கல்லுாரிகள், நீதிமன்றங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என

நல்லடக்கம் செய்யப்பட்டது கலாம் உடல்

ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோ சார்பில் உண்ணாவிரதம் சென்னையில் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் எனவும்,
அடுத்தக்கட்ட கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டடத்தில் நாளை வெள்ளிக்கிழமை கூட்ட முடிவெடுக்கப்பட்டது.

தகவல் : சாந்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, சென்னை

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

ஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும், ஆகஸ்ட் 7 வரை
பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும்.


தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக நேற்று மாலை கலாம் அய்யாவுக்கு செலுத்தப்பட்ட மெளன அஞ்சலி ஊர்வலமும் ,இரங்கல் கூட்டம்

பள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.

பள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர்.

அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம்: மத்திய அரசு கட்டுகிறது

பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடலை டெல்லி கொண்டு வருதல், அஞ்சலி செலுத்துதல், இறுதி சடங்கு போன்றவை குறித்து பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்!

கற்பித்தலில் அலட்சியம் காட்டியும், பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கடந்த ஜூலை, 24ம் தேதி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளியில், திடீர் ஆய்வு நடத்தினார்.
இங்கிருந்த இடைநிலை ஆசிரியர் ராம்குமார்,

மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES) (PRELIMINARY EXAM) - TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)

(Dates of Examination:26.07.2015 FN)

         1
GENERAL TAMIL
       2
GENERAL ENGLISH
       3
GENERAL STUDIES (DEGREE STD)

அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அஞ்சலி செலுத்துங்கள்- பொதுசெயலர் செ.மு வேண்டுகோள்

தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன்,அணு விஞ்சானி,முன்னாள் குடியரசுத்தலைவர்,எப்பதவிவகித்தாலும்,ஆசிரியர் பதவியே தான் விரும்பும் தொழில் எனக்கூறிய மகான், இந்தியாவை உலக நாடுகளுடன் உயர்த்தி ஒப்பிட வைத்த உன்னத தலைவன்,ஓய்வறியாமல் இந்திய நாட்டின் நலனுக்காக உழைத்திட்ட உன்னத மனிதன்,இவரின் புகழ்கண்டு இமயம் தாழ்ந்தது .அததைகைய மகான் இறந்த செய்தி கண்டு நாடே துயரத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் -2005 டெல்லியில்மாவ்லாங்கர் அரங்கில் நடைபெற்ற  ஆசிரியர்கள் மாநாட்டில் கானொளிக்காட்சி மூலம் உரையாற்றினார். 2012 பிப்ரவர் 22 அன்று கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து.கொண்டு சிரப்புரை நிகழ்த்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு
        மாவட்ட ,வட்டார அளவில் பொருப்பாளர்கள் ஒன்று கூடி இன்றும் நாளையும் திட்டமிட்டு -அஞ்சலிக்கூட்டங்கள் நடத்துதல், மௌன ஊர்வலம் நடத்துதல்,மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துதல் போன்ற நிகழ்வுகள் வாயிலாக அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திருமிகு செ.முத்துச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு

சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

          இவர்களுக்கு இதுவரை அந்தந்த சம்பளம் வழங்கும் அதிகாரி ஊழியர்களின் சம்பள பில்லை தயாரித்து, கருவூலத்துறையில் வழங்குவார். அவர்கள் பட்டியல் தயாரித்து வங்கிகள் மூலம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கே 'இ.சி.எஸ்.,' -ல் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.ஜூலை 21ம் தேதி கருவூலகத்துறை, அந்தந்த சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த உத்தரவில், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் புதிய

தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

            அதன்படி, நேற்று, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும், மற்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணி செய்தனர்.

அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.
           இவற்றின் வாயிலாக மாதந்தோறும் அரசு, அதை சார்ந்த நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் (LIFE CERTIFICATE) பெறும்

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

 'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

          ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் எலிசபெத் மனுஇம்மருத்துவமனை மகப்பேறு பிரிவின் தலைமை டாக்டராக உள்ளேன். 2017 வரை பணிக்காலம் உள்ளது. உடல் நிலை சரி இல்லாததால் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன். இதற்கு சுகாதாரத்துறை செயலர் மறுத்துவிட்டார். கட்டாயப்படுத்தாமல் விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


        நாட்டு மக்கள் அனைவருக்கும், தனித்தனியாக, பிரத்யேக அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன், 'ஆதார்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் போட்டோ எடுத்து, கைரேகை, கருவிழி பதிவு செய்தவர்களுக்கு, 'ஆதார்' எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு வழங்கப்படும்

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015

IMPORTANT DATES:
CLICK HERE-Advertisement Notice
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015

Last date for Online Submission of application 19-08-2015
Last date for payment of fees Through E-Challan or Debit/Credit Card by
the candidate 20-08-2015 (before 03:30 PM) Period for On-line Corrections in Particulars (No correction will be allowed in any particulars after this date)
21.08.2015 to 25.08.2015 Download Admit Card from CTET website
04.09.2015 Schedule of Examination DATE OF

EXAMINATION PAPER TIMING DURATION

20.09.2015 PAPER - II 09.30 TO 12.00 HOURS 2.30 HOURS

20.09.2015 PAPER - I 14.00 TO 16.30 HOURS 2.30 HOURS

ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய கோரிக்கை.

 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.

              இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர். மேலும், அவர்கள் தி.மு.க.,வின்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சைமாவட்டக்கிளை மற்றும் திருவிடைமருதூர் வட்டாரக்கிளை கலைக்கப்படுகிறது


Kalam's face

கலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ விடுமுறையை ஆளுநர் ரோசய்யா அறிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ”ஐ லவ் யு” சொன்ன மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பதவி இறக்கம்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அரசு அறிவிக்கை


கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்ட பள்ளிகள் அனைத்தையும் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இது மறைந்த தலைவருக்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். மத்திய அரசு பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தை பின்பற்றும் தமிழ்நாட்டு பள்ளிகள், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தான் முறையானதாக இருக்கும். அது தான் அப்துல்கலாமுக்கு செய்யப்படும் மரியாதையாகவும் இருக்கும். இதுகுறித்து அரசு பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம்  கேட்ட போது, ‘‘முன்னாள் குடியரசுத் தலைவர் மறைவுக்கு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை  விடும் வழக்கம் இல்லை; ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு விடுமுறை விடப்படவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
கடந்த கால வழக்கம் எப்படி இருந்தாலும், அப்துல்கலாம் மறைவு சிறப்பு நேர்வாக கருதப்பட வேண்டும். அப்துல்கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். இந்தியாவில் வேறு எந்த தலைவர்களும் செய்யாத அளவுக்கு லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்று உற்சாகப்படுத்தியவர். தனது கடைசி மூச்சைக் கூட மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நிறுத்தியவர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செலுத்த விதியை காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது. ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.

கலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாளை பிற்பகலில், கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட்

கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு, அன்று(30ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத் திட்டம்இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பாட வல்லுநர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கும் பயிலரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த 3 நாள் பயிலரங்கில் புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என

கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர்

இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை


இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன்

இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.
அனால் அரசு பள்ளிகள் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


-தந்தி செய்திகள்

பள்ளிகள் வழக்கும் போல் இயங்கும் இன்று விடுமுறை இல்லை பள்ளிகல்வி இயக்குனர் அறிவிப்பு-தந்தி டிவி

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்ததாக வந்த செய்தி தவறானது என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்ததாக தந்தி செய்தி அறிவிப்பு.பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

அணு விஞ்சானி அப்துல்கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்

அப்துல் கலாம்-ஓர் பார்வை

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

TNTF-ன் அஞ்சலி ----சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்றுபவரே நல்லாசிரியர்: அப்துல் கலாம்

“மாணவ சமுதாயம் என்னும் துடிப்பான பறவைக் கூட்டத்தை வகுப்பறைக்குள் பூட்டி வைக்காமல் அவர்கள் சிகரங்கள் பல தாண்டி,சிக்கல் இல்லாமல் பறக்க ஆசிரியர்கள்தான் சிறகுகளாய் இருக்க வேண்டும்” என முன்னாள் குடியரசுத்தலைவரும்,விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அறிவியல் மேதை அப்துல்கலாம் அக்கல்லூரியின் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கி பேசியதாவது:

இன்று (27.07.2015) மாலை 7 மணியளவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டபோது மயங்கி கீழே விழுந்த போது எடுத்த படம். திரு.கலாம் உயிருடன் இருந்த போது எடுத்த கடைசி படம்.

டாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தல் அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

டாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தல் அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சா் கே.சி. வீர மணி அவர்கள் உத்தரவிட்டாா்

அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.


தொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என RTIல் தகவல்


உடலநலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில்

சத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சத்துண வு பிரிவில் டேட்டா என்ட்ரி தாற்காலிகப் பணிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக த்தில் ஏதேனும் ஒரு பட்டம், தமிழ் ஆங்கிலம் தட்டச்சில் இளங்கலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்எஸ் ஆபிஸ் பாடத்தில் போதுமான அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணி முற்றிலும் தாற்காலிகமானது. மாதம் ஊதியம் ரூ. 6,000 வழங்கப்படும். இப்பணி மூப்பை அடிப்படையாக கொண்டு வேறு எந்த பணிக்கும் முன்னுரிமை கேட்க முடியாது. வி ரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடம் ஆட்சியர் அலுவலகம், சத்து ணவுப் பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், 2015-16-ஆம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகப் பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரமாக ஆள்கள் நியமிக்கப்படாமல், மற்றத் துறைகளில் பணியாற்றுவோர் பொறுப்பு அளவிலேயே பதிவாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொள்ள அடித்தளம் கல்வி

அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்ள அடித்தளமாக அமைவது கல்வியாகும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.


உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை நகர்மன்ற கம்மாப்பட்டி நடுநிலைப் பள்ளி குறுவளமையத்தில் தொடங்கி வைத்து அவர் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்,  உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள்

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும்  மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு  ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DSE - ALL CEO / DEOs MEETING WILL BE HELD ON 29.07.2015 AT CHENNAI REG PROC CLICK HERE..

நான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள்

நான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள். இதை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவனின் கையில் கொடுத்து வீட்டிலும் , பள்ளியிலும் பன்முறை வாசிக்க செய்வதின் மூலம் கற்றவை மறக்காமல் இருப்பதுடன், மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனும் மேம்படும்

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது: பள்ளிக்கல்வி இயக்குனர்


அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி: உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை

பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்., மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம் இன்னும் முடிவு செய்யவில்லை.
தமிழகம் முழுவதும், ஏழு அரசு; 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 690 பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவை, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.,

பணிநிரவல்ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதினர்


இதற்கான முதல் நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடந்தது. 1511 மையங்களில் சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு ஒரு மணி வரை நடந்தது.

web stats

web stats