rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் செயல்வீரர் அமெரிக்கா புறப்பட்டார்-கோ நாகராஜன்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் செயல்வீரர் , தமிழகத்தின் ஆசிரிய இயக்கங்களின் மாவீரர் இன்று வட அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு பொது செயலாளர் அண்ணன் திரு. செல்வராஜ் அவர்கள் , மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.கோ. நாகராஜன் , மாநில துணை பொது செயலாளர் திரு. சு.ம. பாலகிருஷ்ணன் , திருச்சி மாவட்ட துணை தலைவர்  திரு. முத்துகண்ணு , நண்ப ர் வாசு உடன் பயணம் புறப்பட்டோம் . மாலை 5' மணி அளவில்  ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்ப கூட்டத்தில் கலந்து கொண்டு பிறகு பெங்களூரில்  இரவு தங்கிவிட்டு , விடியற்காலை 4.30 மணிக்கு பெங்களூர் ஏர்பேட்டு சென்று நமது அய்யாவை இன்முகத்துடன் வரவேற்றுஅவரது பயணம் சிறக்க வாழ்த்து தெரிவித்து பின் அவரது பயணம் இன்று, இனிய காலை பொழுதில் மேக கீற்றில் வானவூர்தியில் வட அமெரிக்கா பயணம் ஆரம்பமானது . நிறைந்த மனதோடு   வாழ்த்தி வழியனுப்பியபின் திரும்மி கொண்டு இருக்கிறோம் தோழர்களே
கோ. நாகராஜன் 
மாநில இளைஞரணிச்செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அய்யா செ.மு.அவர்களின் அமெரிக்கப் பயணம் எண்ணியது எண்ணியபடி வெற்றி பெற இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க செயல்வீரர் நமது அய்யா தன் 81 வது வயதில் 18 வயது இளைஞனாக உற்சாகத்துடன் பெங்களூர் ஏர்பேட்டில் இருந்து அமெரிக்கா கிளம்பினார்.பெங்களூர் ஏர்போர்ட்டில்  அய்யா செ.மு உடன் மாநிலநிர்வாகிகள்வ வாழ்த்தி வழியனுப்பினர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரிமாவட்ட சிறப்புக்கூட்டம்-24/06/2016

சென்னை மாநகராட்சி பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதி குறித்து அறிக்கை தாக்கல் பள்ளிக்கல்வி துறைக்கு உயர்நீதிமன்றம் கெடு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறித்து ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புரட்சிகர மாணவர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது.

2016 -17 கல்வியாண்டு வேலை நாட்கள் விவரம்...

மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் இல்லை:முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

    பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது என்பது உகந்த திட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ செங்குட்டுவன், "பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, "இந்தத் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை' என்றார்.

செங்குட்டுவன்: கிருஷ்ணகிரியில் 40 ஆயிரம் ஹெக்டரில் மா விவசாயம் நடைபெறுகிறது. இதில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் கிடைக்கின்றன. 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் தனியார் தொழிற்சாலைகளில் பழக்கூழாக்கப்படுகின்றன. மீதம் ஒன்றரை லட்சம் மாம்பழங்கள் வீணாகிவிடுகின்றன. இவற்றை அரசே கொள்முதல் செய்து, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பழச்சாறாக வழங்கப் பரிசீலிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: மாம்பழச்சாறும், மாம்பழக் கூழும் உபரியாக இருக்கிறது என்றால், அதை விற்பனை செய்வது, எப்படி ஏற்றுமதி செய்வது என்பது தொடர்பாக அரசு ஆராயும். இதற்காக மாம்பழச் சாற்றை பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தால், அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளாது. பல குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே, மாம்பழச்சாறு கொடுப்பது என்பது உகந்த திட்டம் இல்லை.

செங்குட்டுவன்: 2011-ஆம் ஆண்டில் இதே முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில்தான், பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் இந்தக் கேள்வி கேட்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா: வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவற்றைக் கூறுகிறோம். அதைப் பற்றி நன்றாக புரிந்து கொண்ட பிறகு கருத்தை மாற்றிக் கொள்கிறோம்.

அன்றைய தினம் மாம்பழச்சாறு வழங்கலாம் என்று நினைத்தோம். அதன் பிறகு, மாம்பழச்சாறு வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மு.க.ஸ்டாலின்: முதல்வர் கூறுவதை ஏற்கிறோம். சத்துணவுடன் பால் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

முதல்வர் ஜெயலலிதா: இது தனி கேள்வியாகக் கேட்க வேண்டியது. துணைக் கேள்வியாகக் கூடாது. இதுதொடர்புடைய கேள்வி இல்லை என்றார்.

இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்

அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் முதன் முறையாக, 'ஆன்லைன்' வழியே அழைப்பு கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை தபாலில் தான் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டுடன் தபால் வழி அழைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தில், கவுன்சிலிங்கில் மாணவர் பங்கேற்பது குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,

அனைத்து மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்துக்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், பல்கலை வளாகத்திற்கு வந்து விட வேண்டும்

கவுன்சிலிங் அறையில் மாணவருடன் பெற்றோர் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

கவுன்சிலிங்குக்கு மாணவர் வர முடியவில்லை என்றால், மாணவரின் அங்கீகார கடிதத்துடன் பெற்றோர் பங்கேற்கலாம். அதற்கு மாணவரின் அடையாள அட்டையுடன் கூடிய ஆவணங்கள், சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். பெற்றோர் தேர்வு செய்யும் கல்லூரி, பாடப்பிரிவை மாணவர் மாற்ற முடியாது குறிப்பிட்ட நாளில் மாணவர் வர முடியாமல், அவரது பிரதிநிதியும் வராவிட்டால், மாணவர் தனக்கு வசதியான மற்றொரு நாளில் வரலாம். ஆனால், அவர்கள் பங்கேற்கும் நாளில் உள்ள தர வரிசைப்படியே இடங்கள் கிடைக்கும்; முந்தைய தரவரிசை கிடைக்காது கவுன்சிலிங்குக்கு முன் வேறு கல்லூரிகளில் சேர்ந்து, அங்கு அசல் சான்றிதழ்கள் இருந்தால், அந்த கல்லூரியின் முதல்வர், தலைவரின் அங்கீகார கடிதம் பெற்று, அவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். ஆனால், அசல் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே, அசல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இவ்வாறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங், சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் இன்று துவங்குகிறது. கவுன்சிலிங் முன்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அருகில் உள்ள மண்டல அலுவலகங்களில் நடந்தது. சில ஆண்டுகளாக சென்னையில் மட்டும் நடப்பதால், வெளியூர் மாணவர்களுக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், தங்களின், 'ஆன்லைன்' அழைப்பு கடிதத்தை, அரசு பஸ்சில் காட்டினால், மாணவருக்கும், அவருடன் வரும் ஒருவருக்கும், கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்க, போக்குவரத்து மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் கடிதம் என்பதால், கவுன்சிலிங்கிற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு மட்டுமே, இந்த சலுகை கிடைக்கும்.

சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகள்

நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

கல்விக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு சமர்ப்பித்த பரிந்துரைகள்  வருமாறு:

1. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வானது வெளிப்படைத் தன்மையுடனும், நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.

3. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.

4. அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதி சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

5. ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதை மாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக மாற்றலாம். 

6. முன்பள்ளி கல்வி என்று சொல்லப்படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

7. அய்ந்தாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேபோல்  பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிரூபிக்க 2 வாய்ப்பு வரை வழங்கலாம்.

8. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் 2 வகையாக கலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், மற்றவர்கள் 2ஆம் தர தேர்வுகளையும் எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.

9. போர்டு தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பை எந்த முறையிலும் கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதித் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.

10.    அய்நதாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளில் இரண்டாம் மொழியையும், செகண்டரி வகுப்புகளில் 3ஆம் மொழியையும் அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

11.மத்திய உணவுத் திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் ஆகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

12.    கல்வி உதவித் தொகைகள் சரியாகப் பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கான மானியக் குழு ஆணையம் (யூஜிசி) எளிமையான வரை முறைகளை உருவாக்க வேண்டும்.

13.    உலகின் தலை சிறந்த 200 வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், நம் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

14. பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பிரச்சினை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

15. கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாக தகுதி உயர்த்தப்பட வேண்டும்.

16. கல்விக் கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர் கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி : தமிழகத்தில் துவங்க யோசனை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ைப்பு செயல்படுகிறது.இந்த அமைப்பின் கீழ், 598 இடங்களில், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் இந்த பள்ளிகள்தான், ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறுகின்றன.

கல்வியில் சிறந்த கிராம மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, உணவு, உடை, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

நவோதயா பள்ளிகளில், 75 சதவீதம் கிராம மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இரு பாலரும் படிக்கும் இந்த பள்ளியில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.இலவசமாக தரமான கல்வி அளிக்கும் இந்த பள்ளியில், மும்மொழி பாடத்திட்டம் கடைபிடிக்கப் படுகிறது. அதில், ஹிந்தி கட்டாயம். அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்திற்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்க பாடங்கள் போன்றவை ஹிந்தியிலும் கற்றுத் தரப்படுகின்றன. ஹிந்தி இருப்பதால், தமிழகத்தில், 60 ஆண்டுகளாக நவோதயா பள்ளிக்கு அனுமதி வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில், இந்த பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அனுமதி இல்லாததால், இதன் மண்டல தலைமை அலுவலகமும், ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஸ்ரீராம், மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்.தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி கற்பிக்கப்படும் நிலையில், நவோதயா பள்ளிகளுக்கும் அனுமதி அளிக்கலாம் என, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க, மத்திய அரசே இடம் வாங்கிக் கொள்ளும். நவோதயா பள்ளிக்கு, தமிழக அரசுதான் இடம் இலவசமாக வழங்க வேண்டும் என்பதால், சிக்கல் நீடிக்கிறது.

உயர் கல்வி மாணவர்கள் தாமே பயின்று கொள்ள புதிய இணையதளம்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்.

பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களின் பாடங்களைத் தாமே படித்துக் கொள்ளும் விதமாக "ஸ்வயம்' என்ற புதிையதள வசதி தொடங்கப்பட இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். 

              கோவையில் ஐசிடி அகாதெமி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது: நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் ஒரு பகுதியாக தலைசிறந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, நாட்டின் வேறு ஒரு மூலையில் வளர்ச்சி அடையாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிந்து கொள்ளும் விதமாக இணையதள வசதி நிறுவப்பட உள்ளது. அமெரிக்காவை முன் மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளத்தை பொறியியல், இதர உயர் கல்வி பயிலும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் வகையில், அனைத்து பாடங்களும் இடம் பெறும் விதமாக வடிவமைத்துள்ளோம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்களுக்கு ஏற்ப தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாகவும், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் தங்களின் பாடத் திட்டங்களை ஆண்டுக்கு ஒரு முறையோ, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விருப்பப் பாடங்களை தாங்கள் விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கட்டுமானப் பொறியியல் படிக்கும் மாணவரை, அதற்கு தொடர்பில்லாத மின்னணு பொறியியல் தொடர்பான பாடத்தை துணைப் பாடமாக படிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன முதன்மைச் செயலர் கே.ராஜாராமன், ஐ.சி.டி. அகாதெமி தலைவர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RTI - முழு நேரத் கை தொழில் ஆசிரியர் B .A .,B.Ed மற்றும் M .A முடித்து இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதியில்லை-தொடக்ககல்வி துணை இயக்குநர்...

தமிழகத்தில்*கவலையளிக்கும் கல்வித்தரம்கல்வித்துறை செயலர் சபிதா அவர்களை மத்திய அரசு டெல்லிக்கு நேரில் அழைத்து கண்டிப்பு

கல்வித்துறை செயலர் சபிதா அவர்களை மத்திய அரசு டெல்லிக்கு நேரில் அழைத்து டோஸ்..
தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. *மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது*

பொதுசெயலரின் அமெரிக்க பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

 பொது செயலாளர் அவர்களின் வட அமெரிக்கா பயணம் வெற்றிபெற மாநில பொருளார் கே.பி. ரக்‌ஷித்  அவர்கள் நாமக்கல் அலுவலகத்தில் நேரில்வாழ்த்து தெரிவித்த போது..
 

வட அமெரிக்கா புறப்படும்பொதுசெயலருக்கு மாநில பொறுப்பாளர்களி ன்வாழ்த்துச்செய்தி


நாமக்கல தலைமை அலுவலகத்தில் 23/06/2016 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் உயர்மட்ட மாநிலபொறுப்பாளர்கள்கூட்டம்

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) -September 2016 Online Application Form Submission will be started on 22.06.16 upto 18.07.16

பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு

அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், 690 பி.எட்., கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை, இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து.

ஆதார் எண்ணுடன் இணைத்து மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ்

பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைத்து, ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கல்வி சலுகை, கல்வி உதவித்தொகை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில், இந்த உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர்

தொடக்ககல்வித்துறை தொடக்க/நடுநிலை பள்ளியில் பணிபபணிபுரிந்து லரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை விபரங்கள் கேட்டு தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறை

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை !

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்) செவ்வாய்க்கிழமை பேசினார்.

கழிவறை கிளீனரை குடிக்க செய்து ராகிங்: மருத்துவமனையில் மாணவி

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அஸ்வதி(19). இவர் கர்நாடகாவில் குல்பர்காவில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 9ம் தேதி சீனியர் மாணவிகள், அஸ்வதியை கட்டாயப்படுத்தி டாய்லட் கிளீனரை குடிக்க செய்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

எப்போது வரும்? பழமையான பிளஸ் 2 'சிலபஸ் புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?

பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இப்படி உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகள் வரை அமலில் இருக்கும்.ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக, இதுபோன்ற தொலைநோக்கு பார்வை, பள்ளிக்கல்வித் துறையில் குறைந்து விட்டது. 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தேர்தல் முடிவுகள் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது.

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் சொன்னவை இவை.

1. எங்களை அடிக்க கூடாது
2. எங்களுக்கு பாடம் நன்றாக சொல்லித்தர வேண்டும்
3. வகுப்பை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்
4. நல்லவராக இருக்க வேண்டும்
5. எங்கள் வகுப்பறையிலேயே இருக்க வேண்டும்
6. புது புது கதைகள் சொல்ல வேண்டும்
7. புது புது பாட்டுகள் சொல்லி தர வேண்டும்
8.அன்பாக இருக்க வேண்டும்
9. நண்பர்களோடு விளையாட விடவேண்டும்
10. எங்கள் ஆசிரியர் எந்த தப்பும் பண்ணக்கூடாது
11. மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்.

நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :

*.ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள். தலைவர் : திரு.மணி, கோவை, பொதுச்செயலாளர்: திரு.க.செல்வராஜ் (நாமக்கல்) ,
பொருளாளர்: திரு.கே.பி. ரக் ஷித் (திருவண்ணாமலை)

உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை

அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து வரவும், அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடைவிதித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சவுகான்.

'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது

அரசு பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுத்தாலோ, தனியார் பள்ளிகளில் பணிபுரிந்தாலோ, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, மாவட்டத்திற்கு, தலா, ஆறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை, மாவட்ட குழு மூலம் தேர்வு செய்து, ஆக., 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

மாநில நல்லாசிரியர் விருது - ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள்

10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'

பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்

துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும், 18 லட்சம் மாணவர்கள், இப்படி படித்து வருகின்றனர்

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி தரவரிசைப் படியலை வெளியிட்டார்.

RTI-B.Ed-Teaching practice பணியாற்றும் பள்ளியிலே செய்தாலும் கூட half pay leave போட வேண்டுமா?RTI- தகவல்

கூடுதலாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் "due notice" வழங்கிய பின்னர் பிடித்தம் செய்யப்பட வேண்டும்...!

பேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்தாகும்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

பேருந்து படிகட்டில் ஃபுட்போர்டு அடித்துச் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

பள்ளி மாணாக்கர் தொடர்ந்து பேருந்துகளில் ஃபுட்போர்டு அடித்துச் சென்றால் அவர்களது இலவச பேருந்து பயண சலுகை ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2014ல் நியமிக்கப்பட்ட கணித ஆசிரியர்களை முறைபடுத்தி ஆணை வெளியீடு

2014 Maths BT's Regularisation Order(17.06.2016)
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட கணித ஆசிரியர்களை முறைபடுத்தி ஆணை வெளியீடு -  இயக்குனர் செயல்முறைகள்

web stats

web stats