rp

Blogging Tips 2017

பெங்களூரு : ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து வில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி நியமனம் செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்காக அறிவிக்கை இன்னும் 10 நாள்களில் வெளியாகும். இதன்மூலம், 11,200 பணியிடங்கள் நிரப்பப்படும்.

IEC சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர்


மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை ரூ.3 கோடியே 18 லட்சம் வழங்கப்படாமல் இருந்தது. அந்த தொகை இப்போது வழங்கப்பட்டு விட்டது. அந்த ஆசிரியர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

SSA - BRT பயிற்றுநர்களை இடமாற்றம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளமையங்களில் ஆசிரியர் பயிற்றுநர்களாக 55 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆசிரிய, ஆசிரியை பயிற்றுநர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஊதியம் பெற முடியாத நிலையேற்படும். இதையடுத்து மாறுதல் உத்தரவை பெற மறுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளை கண்டித்தும் அலுவலக வளாகம் முன்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
இதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைகிறது. 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேர் படிக்கின்றனர். இங்கு 2010ல் 6, 7, 8ம் வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது. ஆனால் சில மாதங்களிலேயே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.

புண்படுத்தும் பேச்சுக்கள்
கச்சேரி சூப்பர்தான், கூட்டம்தான் இல்லை. பார்ட்டி அருமை, வந்த பார்ட்டிகள் எல்லாம் மொக்கை. பேச்சு நன்றாக இருந்தது, கேட்கத்தான் ஆளில்லை. எக்கச்சக்க ஐடெம்ஸ், எதுவும் வாயில வைக்க முடியல.

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அனைத்து மாணவர்களும் ஆங்கில கல்வியில் சிறந்த முறையில் பயன்பெறும் வகையில் 43 பாடங்களை கொண்ட 2 சி.டி.கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சி.டி.கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஒரு மாவட்டத்திற்கு 50 சிடிகள் வீதம் 1600 சிடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

British Council conduct ‘MY CHANGE STORY’ CONTEST is open to all Teacher Educators

click here to know about British Council conduct ‘MY CHANGE STORY’ CONTEST is open to all Teacher Educators

Aided School FTG Regarding Instructions

FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு

 click here to download the dee proceeding of FTG 2015 reg

"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"- (THEME : WOMEN EMPOWERMENT)

தமிழக பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத் திறன் பற்றிய ஆய்வறிக்கை: 2014 ஆம் ஆண்டுக்கானது

CLICK HERE-ANALYSIS BASED ON DATA FROM HOUSEHOLDS. 29 OUT OF 29 DISTRICTS

25/01/2015 "தேசிய வாக்காளர் தினம்" ஞாயிறு அன்று வருவதால் இன்று 23/01/2015 வெள்ளிக் கிழமை "தேசிய வாக்காளர் தின உறுதிமொழி" -யை எடுக்க பள்ளிக் கல்விச் செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு


PGTRB TENTATIVE GOVT ANSWER KEYS PUBLISHED BY TRB

CLICK HERE-PG- EXAM-TRB-TENTATIVE KEY

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் மாதம் 31–ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ–மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்வுக்கான ஏற்பாடு குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை =செ.முத்துசாமி நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி=-செ.முத்துசாமி

தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல்  முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை இயக்குனர் கவனத்திற்கு  பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் செ முத்துசாமி கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான  தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
       ஒவ்வோர் மாதமும்  ஒவ்வொரு அலுவலகத்திலும் 400 முதல் 600 வரையிலான எண்ணிக்கைஉள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி மாதமே புதிய “இ பேரோல்” முறையிலேயே  பட்டியல் தயாரித்து வழங்கப்படவேண்டும் என்ற கண்டிப்பான அறிவுறை கருவூல அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம், 

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரைஆசிரியர்களுக்குண்டான பொங்கல் போனஸ் வழங்கப்படாதது குறித்து இயக்குனர் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உறுதி.

நாமக்கல் மாவட்ட தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதுவரை பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை.இதுகுறித்து நமது பொதுச்செயலர் செ.முத்துசாமிஅவர்களின் கவனத்திற்கு மாவட்ட இயக்கபொறுப்பாளர்கள் கொண்டுவந்த உடன்  பொதுச்செயலர் இயக்குனர் அவர்களுக்கு தொலைபேசியில் இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
                  எனினும் இயக்குனர் இன்றும் நாளையும்விடுப்பு என்பதால் உடன் இணை இயக்குனர்(நிர்வாகம்) திருமதி லதா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அவரிடம் உடன் ஆசிரியர்களுக்கு போனஸ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள கோரப்பட்டது.
      இணை இயக்குனர் அவர்கள் இது குறித்து நாமக்கல் மாவட்ட தொடக்ககல்வி அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனே கிடைக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தார்

குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர். இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

TET Certificate: - 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளையின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும். - TRB


ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டனர்.

முதுகலை ஆசிரியர் சம்பள விகிதத்தில் முரண்பாடு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மணிவாசகன், தாக்கல் செய்த மனு: முதுகலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையே, அடிப்படை சம்பளத்தில் உள்ள வித்தியாசம், 3:2 என்ற விகிதத்தில், நிர்ணயிக்கப்பட்டு வந்தது. மூன்றாவது சம்பள கமிஷனில் இருந்து, இந்த சம்பள விகிதம் பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளத்தை விட, முதுகலை ஆசிரியர்கள், அதிக சம்பளம் பெற்று வந்தனர். இந்நிலையில், சம்பள கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம், 13,900 ரூபாய் என்றும், முதுகலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம், 14,100 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணை,

மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. படிகட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான ஹால் டிக்கெட்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஜனவரி 20 முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு

இந்த தேர்வு, இம்மாதம் 24ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், இன்று முதல் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதற்காக, ஏற்கனவே பள்ளிக்கு வழங்கப்பட்ட, யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் கோடியிட்ட தாள்கள் பயன்படுத்த கல்வித்துறை முடிவு.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.



அரசு பொதுத்தேர்வில் மொழிபாடங்களை எழுதும் மாணவர்கள் சிலர் சரியான நேர்கோட்டில் எழுதாததால், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டு, பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) வழங்கினால், சீரமம் குறையும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

AEEO PANEL 2015 preparation guidelines - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 2015 ஆம் ஆண்டிற்காண முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் அறிவுறைகள்

CLICK HERE TO DOWNLOAD - AEEO PANEL 2015 

திடீர் தடையால் குழம்பிய வாட்ஸ் அப் பயனாளிகள்!

ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது.

வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை.

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு?

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குவதாக அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது முதலாவது திருப்புதல் தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், செய்முறை பொதுத்தேர்வுகள் பிப்., 5ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒலிப்புமுறை குறுந்தகடுகள் மற்றும் கட்டகங்கள் வழங்குதல் சார்பு

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு 2,242 மையங்களில் 8.79 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
புதிய தேர்வு மையங்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நீண்ட தூரம் பயணிப்பதைக் குறைக்கும் வகையிலும் புதிய தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 600 மாணவர்களுக்கும் அதிகமாக தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக தேர்வு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 மாணவர்கள் என்ற அளவில் இருந்தால் தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும். வினாத்தாள் கட்டுகள், விடைத்தாள் கட்டுகளை விநியோகிக்கவும், தேர்வறைகளைக் கண்காணிக்கவும் இந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் எளிதாக இருக்கும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான பணிகள் நிறைவு: விடைத்தாள் முகப்புப் பக்கங்கள் அச்சிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வரும் வாரங்களில் விடைத்தாள்கள், வினாத்தாள்கள் அச்சிடும் பணிகளும் தொடங்கும் எனத் தெரிகிறது.

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.

7th Pay Commission's report to be implemented on 01.01.2006

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு

DEE - AEEO TO HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2015 PREPARATION REG INSTRUCTIONS CLICK HERE...

'மெட்ராஸ் ஐகோர்ட்' என்ற பெயர் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிறது

'மெட்ராஸ் ஐகோர்ட்' என இருப்பதை, சென்னை உயர் நீதிமன்றம் என மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய மசோதா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, 'பாம்பே ஐகோர்ட், கல்கத்தா ஐகோர்ட்' பெயர்களையும், அதன் இப்போதைய பெயருக்கு ஏற்ப மாற்றம் செய்ய உள்ளது.

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர்களுக்கு போட்டிகள் நடத்திட இயக்குனர் உத்தரவு


ஜன., 21ல் அடைவுத்தேர்வு

ஜன., 21ல் அடைவுத்தேர்வு -- தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும்

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது. தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி
எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு

பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு: சிறிய அஞ்சல் நிலையங்களிலும் அறிமுகமாகிறது


பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய அஞ்சல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக கிராமப்புற மற்றும் சிறு அஞ்சல் நிலையங்களிலும் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, கடிதப்போக்குவரத்து மட்டுமன்றி ஏராளமான வணிக ரீதியான சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனடிப்படையில் அஞ்சலக சேமிப்புத்திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.



புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த

10 ஆம் வகுப்புக்கு கிரேடு முறை கல்வித்துறை முடிவு

7th CPC Estimated Pay Calculator

CLICK HERE-Your estimated 7th Pay Commission Pay and Allowances

பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆண்டுதோறும் பொங்கல் போனஸாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா ரூ.3000, உயர் அதிகாரிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

கட்டணத்தை திரும்ப வழங்கிய தலைமை ஆசிரியர்

தமிழக எல்லையில் கன்னட பள்ளிகள் மூடல் 21ம் தேதி போராட்டம்

பெங்களூருவில் நேற்று வாட்டாள் சலுவளி கட்சியின் மாநில தலைவர் வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டி: கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகரை ஒட்டி உள்ள தமிழக எல்லையில் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், இந்த பள்ளிகளை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய கன்னட மொழி ஆசிரியர்களை தமிழக அரசு வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

'ஸ்மார்ட் கிளாஸ்'களாகும் நடுநிலைப் பள்ளிகள்: உயர்நிலை பள்ளிகள் புறக்கணிப்பு

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் 'புரஜெக்டர்' வசதியுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்' களாக மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், உயர்நிலை பள்ளிகளில் இவ்வசதியின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தவிக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 5 டெஸ்க்டாப், ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 5 லேப்டாப், இன்டர்நெட் வசதி, ரூ.35 ஆயிரத்தில் புரஜெக்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 'டி.வி.டி', பிளேயர்களும் வழங்கியுள்ளனர். மதிய வேளையில் மாணவர்கள் இவ்வசதிகளை பயன்படுத்துகின்றனர். ஆறு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை கல்வியை பெறுகின்றனர்.

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும், தமிழக அளவில், ஒரே மாதிரியான வினாத்தாளில் அமைவதால், அதன் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதில், தற்போது நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில், பிளஸ் 2 மாணவ, மாணவியரில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்ச்சி இருந்தாலும், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை: மாணவர் சேர்க்கை குறையும் என, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு

பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

பல திட்டங்கள்:

தரமான ஆசிரியர்களை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வியியல் படிப்புகளுக்கான கால அளவை மாற்றியும், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றில் புதிய விதிமுறைகளை வகுத்தும், என்.சி.டி.இ., அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான காலம், இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது;

5 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படும் லேப் உபகரணங்கள்: பள்ளிகளில் பயன்பாடின்றி தேங்கியுள்ள அவலம்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஆண்டு தோறும் வழங்கப்படும் லேப் உபகரணங்கள் பள்ளிகளில், பயனற்று தேங்கி கிடப்பதால், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நிதி:

தமிழகத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு தலைப்புகளில், நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆண்டுதோறும் பள்ளி மானிய நிதியாக, ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் அறிவியல் உபகரணங்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கும், மின்சார மற்றும் போன் பில்லுக்கு,

கிராமப்புற மாணவர்களின் வாசிக்கும் திறன் அதிகரிப்பு: தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்து உள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.'பிரதம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 2006 முதல், கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து, 'ஏசர்' என்ற தலைப்பில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577 மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில், மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது. நாடு முழுவதும் கட்டாய கல்விச் சட்டம் அறிமுகமாகி உள்ள நிலையில், 'ஏசர்' குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டது. தமிழகத்தில், 29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335 வீடுகள்; 3571, 3 - 5 வயதில், 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய, 2,674 குழந்தைகளிடம், ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள்

* 6 - 14 வயதில், பள்ளி சேராத குழந்தைகள் எண்ணிக்கை, 2013 ஆண்டை விட, 2014ல் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவை விட மிக குறைவாக உள்ளது.

உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 13 ஆயிரம் கோடி ரூபாயாக குறைப்பு: பட்ஜெட் மறுமதிப்பீட்டில் மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, 3,900 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.இது, நடப்பு கல்வி ஆண்டில், நிரந்தர கட்டடங்களுக்கு இடம் மாறும் திட்டத்தில் உள்ள, எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.ஐ.டி.,) பாதிக்கும். அவை, இறுதிக் கட்ட பணிகளுக்கான நிதியை பெற முடியாத நிலை ஏற்படும் என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில், 16 ஐ.ஐ.டி.,க்களுக்கு, 2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில், தற்போது, 163 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, 2,337 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த, எட்டு ஐ.ஐ.டி.,க்களில், ஜோத்பூர், ரோபர் உட்பட இரண்டு நிறுவனங்களை தவிர்த்து, இதர ஆறு நிறுவனங்களை வரும் ஜூலைக்குள் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றும் திட்டம், முந்தைய ஐ.மு., ஆட்சியில், 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், ஐந்து ஐ.ஐ.டி., மற்றும் ஐந்து ஐ.ஐ.எம்.,களுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது, தற்போது, 65 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரும்பி இந்தி படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆர்வம்

தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில் இருந்தாலும், இந்திமொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.இந்த புள்ளி விவரம், சென்னை இந்தி பிரசார சபா, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டவை. 'தமிழகத்தில், இந்தி மொழியை கட்டாயமாக கல்வித் திட்டத்தில் திணிக்கக் கூடாது' என, பெரும் கிளர்ச்சி எழுந்து, அதன்மூலம், திராவிட கட்சிகள் ஆட்சியையும் பிடித்தன. 'இந்தி பேசும் மாநிலங்கள் ஏற்காத வரை, அந்த மாநிலங்களில், இந்தி கட்டாயமாக்கப்படாது' என, மறைந்த பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியை, பின்பற்ற வேண்டும் என்பது, தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை.

web stats

web stats