rp

Blogging Tips 2017

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள்: தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு

பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரையிலும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 10 வரையும் நடைபெறுகின்றன.

தேர்வு அலுவலர்களுக்கும் செல்போன் பயன்படுத்த தடை

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கையேடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது. அந்த கையேட்டில், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர்

பிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
அரசு தேர்வுத்துறை சார்பில், பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும். அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.
இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின், என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுத வேண்டும்.

மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை நிறுத்தமா? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மானியத் திட்டத்தில் இணைவதற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் இருப்பதாகவும், யாருக்கும் எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்படவில்லை எனவும், அப்படி ஏதேனும் புகார்கள் இருந்தால் அதைத் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் அச்சமடையும் வகையில் பறக்கும்படையினர் செயல்படக் கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை

பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது என பறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ள அறிவுரைகளின் விவரம்:

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

ளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில்,

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.
டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து

அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா: பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

மார்ச் 8 பேரணிக்கு அழைப்பும் இந்து பத்திரிக்கை செய்திக்கு மறுப்பும்-செ.மு அறிக்கை



105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறிய தாவது: பாஸ்போர்ட் பெற 13 வித முகவரி ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன. அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களும் உண்டு. தற்போது மக்கள் கோரிக்கையை ஏற்று தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அந்த புத்தகங்களையும் முகவரி ஆவணமாக காட்டி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 105 வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி ெவளியிட்டுள்ளது. அந்த விவரங்களை www.passportindia.gov.in மற்றும் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் அறியலாம்

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

DSE - HIGH SCHOOL HM PROMOTION REG PROC CLICK HERE...

நூலகங்களில் உறுப்பினராகும் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் விநியோகம்

பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த மாவட்ட மைய நூலகங்களில் உறுப்பினராக சேரும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது.

பழங்கால நூல்களை இணையத்தில் படிக்கலாம்: டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ் சேவையை போற்றும் வகையில் ‘தமிழ்த் தாய் 67’ விழா, சென்னை தரமணியில் நடந்து வருகிறது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்களின் 2 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி http://www.ulakaththamizh.org என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணைய சேவையை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியத் தேர்வுத் துறைத் தலைவர் டி.விஜயலட்சுமி நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

மார்ச்-8 மாவட்ட ஜாக்டோ பேரணிக்கு ஆயத்தமாவீர்-நாளை குறுவள மையகூட்டத்தில் கோரிக்கைகளோடு ஆசிரியர்களைசந்திப்பீர்-கே.பி.ரக்‌ஷித் மாநில துணைத்தலைவர்

அன்பார்ந்த ஆசிரியப்பேரினமே!
அலைகடலெனெ எழுந்திரு. இனியும் தூக்கம் வேண்டாம்.இதுவே தருணம். அரசு பேச்சுவார்த்த என அழைத்து நம் இனததின் இயக்க முன்னோடிகளை 3 மணி நேரம் காக்கவைத்து,கால்கடுக்க நிற்க வைத்து,மூவரை மட்டும் அழைத்து  ஜாக்டோ பொறுப்பாளர்கள் உடன் பேச நேரம் ஒதுக்கீடு வாங்கவில்லை என க்கூறி முறையாக வாங்கி வாருங்கள் என திருப்பிஅனுப்பிய கொடுமை ஒருபுறம் என்றால்,மறுநாள் தமிழ் இந்து நாளிதழில் செய்தியாக அப்பட்டமான பொய்யை,அனைவரையும் ஏமாற்றும் வண்ணம்ஜாக்டோ பிரதிநிதிகளை ,முதல்வர் அழைத்து பேசியதாகவும்,பொதுத்தேர்வுநேரத்தில் போராட்டம் வேண்டாம் என

ஜாக்டோ -தொடக்க -உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் சார்பாக மாவட்டபேரணியில் கலந்துகொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல்

பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகின்றன. இதையடுத்து, அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை

“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.

அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும்.

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது. பா.ஜ., கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குக் கையேடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வுப் பணியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு அலுவலர்களாகவும், பத்தாம் வகுப்புத் தேர்வுப் பணியில் 1.20 லட்சம் ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர்.

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது.

பள்ளிகளில் குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது துறை அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

DSE - GUIDELINES REG SCHOOL FIELD TRIP CLICK HERE..

முதல்வரை சந்தித்ததாக தவறான செய்தி வெளியிட்ட இந்து-தமிழ் நாளிதழுக்கு மறுப்பு செய்தி வெளியிட ஜாக்டோ கோரிக்கை


அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

திட்டமிட்டபடி 8ஆம் தேதி ஜாக்டோ போராட்டம் நடைபெறும்-


திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்-26.02.2015 மாலை நடைபெற்றது.பொதுசெயலர் கலந்துகொண்டு இயக்கப்பேருரை ஆற்றீனார்


Central government scheme for a girl child..its really useful...


பேச்சுவார்த்தைக்கு அழைத்து,பேசாமல் அவமதிப்பு அரசுமீது ஜாக்டோ அதிருப்தி-தினகரன் செய்தி

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.
 
 ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம் சார்பில், கருத்துரு கேட்கப்படும். இந்த ஆண்டு கல்வித் துறைக்கு,

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு-ஊதியம் நிர்ணயம் செய்யும்அலுவலரே களையலாம்-அரசு கடிதம்


பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோ ருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர்.

'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு-நடந்தது என்ன?

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, 'ஜாக்டோ' ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
15 கோரிக்கைகள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் வழங்குதல்; தன் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 கோரிக்கைகள், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெத்தநாய்க்கன் பாளையம் வட்டார பொறுப்பாளர்கள் இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன் பாளையம் வட்டார செயலர்திரு துரை அரசன், வட்டார துனைசெயலர் திரு சி.நாகராஜன் ,மாவட்ட துணைச்செயலர்திரு இரா.ராஜா மற்றும் மாநிலதுணைத்தலைவர் திரு கோ.முருகேசன்  ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மார்ச் 8-ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் -ஜாக்டோ

மார்ச் 8-ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று JACTTO ஆசிரியர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

''பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் 3 மணிநேரம் காக்க வைத்தார். 3 மணிநேரம் காக்க வைத்ததால் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை. பேச்சுவார்த்தையை புறக்கணித்து திட்டமிட்டபடி மார்ச் 8-ல் கோரிக்கை பேரணிமாவட்டத்தலைநகரில்  நடத்த உள்ளோம். சென்னையில் கோட்டையை நோக்கி எங்கள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன் படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மண்டல கணக்கு அலுவலர், கோயம்புத்தூர் அவர்களால்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு


தற்காலிக மதிப்பெண் சான்று

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா. சென்னையில் பிளஸ் 2 தேர்வு குறித்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள்நகல் உடனே கிடைக்க புதிய ஏற்பாடு. விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் விடைத்தாள் நகல் கிடைக்கும்.

சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில்

'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

கடந்த, 2003ல், மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய ஆசிரியர் சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போராட்ட முடிவுகளுடன், ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன.

PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்
குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.

நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு



வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்ட
ர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால் மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் பணி நியமனம்

மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை

வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவில், பொதுத்துறை, நான்கு; தனியார் துறை 21, என மொத்த
ம், 25 பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும்போது, காப்பீட்டு நிறுவனங்களிடம், மூன்றாவது நபர் மற்றும் உரிமையாளர் என, இரண்டு காப்பீடுகள் செய்யப்படுகின்றன.

பணமாக பெறலாம்:

விபத்து, தீ, திருடு என, ஏதேனும் ஒரு காரணத்தினால், வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டால்,

டிராய் புதிய நடவடிக்கை எதிரொலி: தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது

கைபேசி மற்றும் தரைவழி இணைப்பு தொலைபேசி கட்டணங்கள் அதிரடியாக குறைகின்றன. தொலைபேசி மற்றும் கைபேசி நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் பேசும் போது அதற்காக தனி கட்டணம் வசூலிக்கின்றன. தற்போது இது நிமிடத்திற்கு 20 காசுகளாக உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டெல்லி மாநாடு மே 6

இந்தியத்தலைநகராம் புது டெல்லி யில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மாநாடு வரும் மே மாதம் 6 ந்தேதி புதன் கிழமை புதுடெல்லி மக்களவை வளாகத்தில் அமைந்துள்ள கான்ஸ்டிஷன் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் தகவல்கள் விரைவில்

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

GO.8 PERSONNEL & ADMINISTRATION DEPT DATED.19.01.2015 - GRANT OF UNEARNED LEAVE ON MEDICAL LEAVE - CONSOLIDATED INSTRUCTIONS CLICK HERE...

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு யோகா நலச்சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்தன. 11 மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 106 பேர் பங்கேற்றனர். சங்க மாநில செயலாளர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார். ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா, விளையாட்டு அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தனர்

உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் விரைவில் பணியிட மாற்றம்

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறுவகைச் சுவை என்ன என்ன? அவற்றின் பயன் என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழு-(26.02.2015 மாலை-5.30)

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம்  வரும் 26.02.2015 மாலை 5.30 மணிக்கு திருவண்னாமலை , டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் என்று மாவட்டசெயலர் திரு.கே.பி.ரக்‌ஷித் தனது அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கூட்டத்தில்  நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ,Ex MLC அவர்கள் கலந்து கொண்டு சிரப்பிக்க உள்ளார்.

அரசுப் பள்ளிச் சுவர்களில் சித்திரங்கள் வரைய நிதி ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 250 அரசு நடுநிலைப் பள்ளிச் சுவர்களில் கல்வி தொடர்பான வண்ணச் சித்திரங்கள் வரைய ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிவகங்கை மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) அ. வசந்தி கூறியது:

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும் 
 
.http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் பிப். 25, 26 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி, அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் (பொறுப்பு) இரா. வீரக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பிப். 25, பிப். 26 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை மூலம் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, வரும் 25-ஆம் தேதி முதல் அவர்கள் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மும்பையில் இந்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் அமைப்புக்கும் (ஐபிஏ) வங்கி ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே திங்கள்கிழமை ஐந்து மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

PGTRB: கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான  சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,  அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, மாநில பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளுடன், இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களின் பெயர்களும் இருந்தன. இதையடுத்து,  கடந்த டிசம்பரில் நடப்பதாக இருந்த, சான்றிதழ் சரிபார்ப்பு,

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்- உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.

மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்து அடித்தார். இதுபற்றி, அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, தொழிலதிபரான அவரது தந்தை ரவுடி கும்பலுடன் பள்ளியில் புகுந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார். மேலும் பள்ளியும் சூறையாடப்பட்டது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கிய புள்ளி என்பதால் மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசிரியர்களும், பள்ளிகளின் நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு. இரண்டு மற்றும் நான் காம் சனிக்கிழமை விடுமுறை

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

முழுநேரம் இயங்கும்: புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் முதல், தொடர் போராட்டங்களை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் அறிவித்த தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் கூட்டமைப்பு ஒத்தி வைத்தது. அதன்பின், இரு தரப்புக்கும் நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் அறிவித்தனர்.

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை

பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது

CLICK HERE-DEE -ENGLISH TRAINING AT CHENNAI

எங்கெங்கும் இணைய வசதி: கூகுளின் பிரமாண்ட திட்டம்!

உலக அளவில் இணைய வசதி எட்டாதவர்கள், 5 பில்லியன் பேர் இருக்கின்றனர். இதற்கு, பல இடங்களில் இணைய சமிக்ஞைகள் எட்ட முடியாமல் இருப்பது தான் காரணம். எனவே, வருமானத்திற்கு இணையத்தையே நம்பியிருக்கும் தேடு பொறி இயந்திர நிறுவனமான கூகுள், எல்லோருக்கும் இணையம் எட்ட வேண்டும் என்பதற்காக, 'புராஜக்ட் லூன்' என்ற திட்டத்தை, 2013ல் அறிவித்தது.

புரட்சிகர திட்டம்:

மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை


பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன். நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம்

Direct Recruitment of Computer Instructor - Certificate Verification Details

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
In pursuant to the announcement dated 19.01.2014 the Certificate Verification process for selection of 652 Computer Instructors that has been kept in abeyance was published in the TRB website.  Now the directions has been issued by the Hon’ble Supreme Court of India on 10.02.2015 to complete the process of Direct Recruitment of 652 Computer Instructors. 
As per the directions of the Hon’ble Supreme Court of India the Teachers Recruitment Board has announced the re-scheduled dates of Certificate Verification from 27.02.2015 to 02.03.2015
for the  revised list  (subsequent to Supreme Court Orders) of candidates provided by the  Director of Employment and Training, Chennai -32 and the same will be published in the TRB Website on receipt from the Director.  

மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநில தழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டுகோள் விடுத்துள்ளது.திண்டுக்கல்லில் 28 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்த போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.

இதில் ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், பேட்டரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாநில அரசு ஆசிரியர்களுக்கு

B.Ed கல்வியியல் படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்


சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும்

ஜாக்டோ இயக்கத்தில் இணைந்துள்ள இயக்கங்கள் பட்டியல்


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, மாநில உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்


ஆன்லைனில் பிளஸ் 2 ஹால்டிக்கெட்: அரசு தேர்வு இயக்ககம் உத்தரவு

: மாநிலம் முழுவதும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி 31ம் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இத்தேர்வு நாளை முடிகிறது

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு!

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

உரிமையியல் நீதிபதி பதவி தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதில் 6 ஆயிரத்து 561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.

"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி"

பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பேராசிரியர் கே.ஆர்.சுந்தர்ராஜன் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. திருவண்ணாமலை மாவட்டசெயற்குழு கூட்டம்(21.02.2015)

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன .
சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது.
பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும் பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது. அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படிங்கள்

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்:பெயர் எழுதக்கூடாது:வினாத்தாளில் எந்தக் குறியீடும் இடக்கூடாது;- பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுற்றறிக்கை:

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவற்றை, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட வேண் டும், விடைத்தாளின் ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இரண்டு பக்கங்களிலும் எழுத வேண்டும். செய்முறைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியிலேயே இருக்க வேண்டும்; வினா எண்ணைத் தவறாமல் எழுத வேண்டும். இரு விடைகளுக்கு இடையில், இடைவெளி விட்டு எழுத வேண்டும்; வினாத்தாளின் வரிசை யை, மதிப்பெண்கள் பக்கத்தில் குறிக்க வேண்டும்; விடைத்தாளில் விடைகளை கறுப்பு அல்லது நீல மை பேனாவால் எழுத வேண்டும். தேர்வு முடியும் போது, விடைத்தாளில் எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றில் குறுக்குக் கோடு போட வேண்டும்; இதேபோல் எதை செய்யக்கூடாது என்றும் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

பெயர் எழுதக்கூடாது:

மேலும், வினாத்தாளில் எந்தக் குறியீடும் இடக்கூடாது; விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது; விடைத்தாளின் எந்தப் பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது. வண்ண பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது; விடைத்தாளில் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது; விடைத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு மாணவர்களை அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கும், தேர்வு மையங்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், தேர்வுத்துறை இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பிரச்னைகள் ஏற்பட்டால் தனியார் கல்லூரிகள் அரசுடமை : அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை


பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.
ஊக்க ஊதியம்:
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படும். இந்நிலையில், 2013 ஜனவரியில், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., முடித்து உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படும். மேலும் எம்.எட்.,

ஆசிரியர் சங்கங்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது

ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
26 சங்கங்கள்: அதனால், 2003க்கு பின், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொடக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த, 'ஜாக்டோ' உயர்மட்டக்குழு கூட்டம், சென்னையில்

web stats

web stats