rp

Blogging Tips 2017

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் - Collection By Mr. Manogar

ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

காலாண்டுத் தேர்வுக்குள் பள்ளிகளின் தரம் உயர்த்தாவிட்டால் நடவடிக்கை - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிச் செயலர் எச்சரிக்கை

புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்:


புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்:

1.தேசம் என்றால் மக்கள்,பள்ளி என்றால் படிப்பு.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்லுங்கள்.

3.கற்பித்தல் இல்லா நாளே இருக்க கூடாது என்பதை மனதில் இருத்துங்கள்.

4.தேவயற்ற விடுப்பு,அனுமதி தவிருங்கள்.

5.தனியாக புள்ளி விவர பதிவேடு தொடங்குங்கள்.

பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி


பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த கல்வியாண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடவும், இலவச லேப்டாப், கணித உபகரணப் பெட்டி, கலர் பென்சில்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவும் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய இயக்குநர் பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட 3 இணை இயக்குநர் பணியிடங்களும் 4 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்


விடுப்பு விதிகள்

தமிழ்நாடுவிடுப்பு விதிகள்பார்வையிட
 இங்கே கிளிக் செய்யவும்

புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது

 கல்வியாண்டு சிறப்புடன் அமைய அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது

அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்து குடிமகன்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம்.
பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் NATA 2013 என்ற நுழைவுத்தேர்வின் அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

எம்.பி.பி.எஸ். சேர்க்கை: நாளை ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை பிற்பகல் "ரேண்டம் எண்' ஒதுக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்த விண்ணப்பித்துள்ளோருக்கு கம்ப்யூட்டர் மூலம் வெள்ளிக்கிழமை "ரேண்டம் எண்' ஒதுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.

ஜிப்மர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், ஆந்திர மாநிலம் செகந்திராபாதைச் சேர்ந்த மாணவர் கனூல் ரமேஷ் சந்திகர் 174 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள 150 இடங்களுக்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த 2-ம் தேதி நாடு முழுவதும் 14 மையங்களில் நடைபெற்றன.
இதில், 52,298 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். விண்ணப்பித்தோரில் இது 75.36 சதவீதம். கடந்த ஆண்டு 29,108 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், பொதுப் பிரிவு 51, ஓபிசி 27, எஸ்.சி. 15, எஸ்.டி. 8, புதுச்சேரி பொது 23, புதுச்சேரி ஓபிசி 11, புதுச்சேரி எஸ்.சி. 6 மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் 5, மத்திய அரசின் பரிந்துரைக்கு 4. இதில் உள் ஒதுக்கீடாக, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத் மாணவர் கனூல் ரமேஷ் சந்திகர் 174 மதிப்பெண்களுடன் ஓபிசி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். மற்ற பிரிவில் முதலிடம் பிடித்தவர்கள் விவரம்:
பொது பிரிவில், பெங்களூர் ஹேமந்த் அமர்தீப் சந்தூர் 172, ஹைதராபாத் டிஎன்சி.பிரணவ் 172.
எஸ்.சி. பிரிவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பாயி சொப்னா 161, எஸ்.டி. பிரிவில் மணிப்பூர் இம்பால் கதிபிரி நீலியா 146.
பொது மாற்றுத்திறனாளி பிரிவில் கோல்கத்தா அனுபாப் பட்டாச்சார்யா 169.
புதுச்சேரி யூனியன் பிரதேசம்: பொதுப் பிரிவில் எம்.கார்த்திகேயன் 166, ஓபிசி பிரிவில் டி.சுஷ்மா 164, எஸ்சி பிரிவில் இ.மோனிஷா பிரியா 133 ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இத்துடன் பொதுப்பிரிவில் 174 முதல் 160 மதிப்பெண்கள் வரை எடுத்திருக்கும் 167 மாணவ, மாணவிகளின் பெயர், ஓபிசி பிரிவில் 174 மதிப்பெண்கள் முதல் 153 மதிப்பெண்கள் வரை பெற்ற 99 மாணவ, மாணவியரின் பெயர், எஸ்சி பிரிவில் 161 மதிப்பெண்கள் முதல் 140 மதிப்பெண்கள் வரை எடுத்த 66 பேரின் பட்டியல், எஸ்.டி. பிரிவில் 146 மதிப்பெண்கள் முதல் 129 மதிப்பெண்கள் வரை எடுத்த 36 மாணவர்களின் பட்டியல், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 169 முதல் 110 வரை மதிப்பெண்கள் எடுத்த 29 மாணவர்களின் பட்டியல், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் 166 முதல் 140 வரை மதிப்பெண்கள் எடுத்த 30 மாணவர்களின் பட்டியல் ஆகியவற்றை ஜிப்மர் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான தனி ஒதுக்கீடாக, 166 முதல் 129 மதிப்பெண்கள் பெற்ற புதுச்சேரி மாணவர்கள் 59 பேர், ஓபிசி பிரிவில் 164 முதல் 118 வரை மதிப்பெண்கள் பெற்ற 47 பேர், எஸ்சி பிரிவில் 133 முதல் 107 வரை மதிப்பெண்கள் பெற்ற 16 பேர் பட்டியலையும் ஜிப்மர் வெளியிட்டுள்ளது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஜிப்மரில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: www.jipmer.edu.in.

கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் 24–ந்தேதி வெளியீடு:

சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் வருடந்தோறும் கால்நடைமருத்துவ படிப்புக்கு மாணவர்களை கவுன்சிலிங் மூலம் சேர்த்து வருகிறது.

கால்நடை மருத்துவப்படிப்புக்கு 180 இடங்கள் உள்ளன. மீன்வள படிப்புக்கு 40 இடங்கள் இருக்கின்றன. உணவு தொழில்நுட்பத்திற்கு 20 இடங்களும், கோழியின உற்பத்தி தொழில்நுட்பத்திற்கு 20 இடங்களும் உள்ளன. மொத்தத்தில் 238 இடங்கள் உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க கடந்த 3–ந்தேதி கடைசி நாள். மொத்தம் 14 ஆயிரத்து 687 படிவங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் கால்நடை அறிவியல் படிப்புக்கு மட்டும் 11 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.டெக். என்கிற உணவு தொழில்நுட்பம் படிப்புக்கு 935 படிவங்களும் வந்து சேர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு மொத்தத்தில் 8ஆயிரத்து 994 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கவுன்சிலிங் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. மாணவர்களின் மார்க்குக்கு ஏற்ப ரேங்க்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது 24–ந்தேதி வெளியிடப்படுகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர 10–ந்தேதி முதல் விண்ணப்பம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு:


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 10–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை வழங்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

விண்ணப்பம் எப்போது?

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் 2013–2014–ம் கல்வி ஆண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 10–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை குறிப்பிட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும். கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திலும், மாநில கல்லூரியிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

அடுத்த மாதம் கவுன்சிலிங்

விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.150 மட்டும். குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை ‘‘செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அட்மிஷன்ஸ் 2013, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை 641 013’’

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர்:


கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், மாநில அளவில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்கவில்லை. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தன. இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், மாவட்டந்தோறும், தேர்ச்சி சதவீதம், மிக குறைவாக உள்ள, 10 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வரவழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர்.
விசாரணை குழு:
பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழு,

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி ஊழியர் கைது


ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய, தொடக்க கல்வி அலுவலக கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு பள்ளி இடை நிலை ஆசிரியராக சிவாஜி பணிபுரிகிறார். இவர் திறந்த வெளி பல்கலையில், பி.எட்., படித்து வந்தார். பி.எட்., படிக்க வகுப்பறை பயிற்சி பெற வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது? பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது:


இந்த கல்வி ஆண்டில் (2013–2014) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை பட்டியலையும், எந்தெந்த சனிக்கிழமைகள் வேலைநாட்கள்? என்ற பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

210 வேலைநாட்கள்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு கல்வி ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) 210 வேலை நாட்களும், அதேபோல் தொடக்கக்கல்வித்துறைக்கு உட்பட்ட ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு 220 வேலை நாட்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

பொதுச்செயளரின் திருப்பூர் -பொள்ளச்சி வடக்கு வட்டாரக்கிளை தொடக்க விழா அழைப்பிதழ்

லஞ்சத்தினை ஒழிப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...


இது!

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கிறது லஞ்சம்!

லஞ்சங்களின் முதன்மை இருப்பிடங்களாக இருப்பவை அரசாங்க அலுவலகங்கள்தான் என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களுக்காகவும்- அரசாங்க ஊழியர்களுக்காகவும் செயல்பட வேண்டிய அரசு அலுவலக ஊழியர்கள் தங்களின் பணிசுமையை காரணம் காட்டி வரம்பிற்கு மீறிய வகையில் பணத்தினை பொதுமக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும் பறிப்பதை வெளியில் சொல்ல எந்த ஒரு குடிமகனும் முன்வருவதில்லை.

அரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில் முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம் நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வாங்கப்படுகிறது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும்பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது

எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது


சென்னை, ஜூன்.6 - எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2013 - 2014-ம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் காப்பாளர், உடற்கல்வி ஆசிரியர், கணினி பயிற்றுனர் ஆகியோர்களுக்கு மாவட்டத்திற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 07.06.2013 காலை 9.00 மணி அளவிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் அம்மாவட்டத்தில் மூன்று ஆண்டு காப்பாளர் பணி முடித்தவர்கள், பணி நிரவல் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஊதிய குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கையை பரிசீலனை செய்ய உயர் அதிகாரிகள் குழு அமைக்கப் படவில்லை - தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பதில்

தள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப் போடுங்கள்...

வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாமே...

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் வைகைச் செல்வன். உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம். (இடது) கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள்.சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் வைகைச் செல்வன். உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம். (இடது) கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள்

தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்புப்பணி_கல்விப்பணி பாதிக்க வாய்ப்பு

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 4




பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3


கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3

கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர் என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.
நம்மை விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.
பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஆங்கிலம் எவ்வாறு கற்பிப்பது எனத் தெரியாமலேயே ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், இளங்கலை பட்டபடிப்பில், வரலாறு படிக்காமலேயே வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள், புவியியல் படிக்காமலேயே புவியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்பியல் படிக்காமலேயே இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், வேதியியல் படிக்காமலேயே வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயிரியல் படிக்காமலேயே உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்ததுதான் நமது பள்ளிகள். அதையும் மீறி சாதிக்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர்.
போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில், அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டிய இன்றைய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் படித்த ஆசிரியர்கள் மற்றவற்றை வெற்றிகரமாக கற்பித்தல் என்பது எந்த அளவு நடைமுறை சாத்தியமானது அறிந்துகொள்ளக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய, நிரூக்கத் தேவையில்லாத உண்மை.
எனவே, இடைநிலை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனும் மூன்று வகையான ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டையம்” [D. T. Ed.].
நான்கு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு இளங்கலைப் பட்டம்” [B. Ed.].
மேலும் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு முதுகலை பட்டம்” [M. Ed.].
பட்டையப் பயிற்சியில், 1 முதல் 5 வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.
இளங்கலைப் பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.
முதுகலை பட்டப் பயிற்சியில், 11 முதல் 12 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு அல்லது சமூக அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு, etc. ஒரு பாடம், அதைக் கற்பிக்கும் முறைகளும், 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.


web stats

web stats