rp

Blogging Tips 2017

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்

வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது

பள்ளிகளுக்கு அருகிலும், தெருக்களிலும் ஹெல்மெட் சோதனை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டருகே இருக்கும் பள்ளியில் குழந்தைகளை விடுவதற்கு வருபவர் களும், அருகே இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டு சோதனை என்ற பெயரில்

11.07.2015---CRC-SABL SCIENCE POWER POINT...-

  • CLICK HERE SABL-SCIENCE POWERPOINT

அகஇ - ஜூலை மாத CRC - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

 தேசிய எரிசக்தி மேலாண்மைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'எரியாற்றல் சேமிப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக வலைதளம் துவங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிசம்பர், 14ல், ' தேசிய எரிவாயு பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில், எரியாற்றல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரத்யேக வலைதளம் ' www.enregysavers.co.in' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு

சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.

             முதல் கட்டமாக  புதுச்சேரி, சண்டிகர் மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன

CRC & BRC பயிற்சி நாட்களுக்கு ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் செலவீனத்தொகை எவ்வளவு? கேள்விகளுக்கு RTI பதில்


ஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.


மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPC ல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது  கீழே குறிப்பிடப்பட்டுள்
"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".
அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு  ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு

காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் கட்டாய நீதிபோதனை வகுப்பு இருந்தது. இந்த வகுப்பில் மாணவர்களுக்கு அரிய பல விஷயங்களையும், நல்லொழுக்கம் தொடர்பான நீதிக் கதைகளும் பாடமாக நடத்தப்பட்டு வந்தன. இதுபோன்ற நீதிபோதனை வகுப்புகள் ஒரு மாணவரை நல்ல பழக்க வழக்கங்களுக்கு இழுத்துச் சென்றன. காலப்போக்கில் இந்தக் கல்வித் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு விலக்கு

தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி இயக்ககம் - EMIS கீழ் மாணவர் தகவல் தொகுப்பு - ஆதார் எண் பெற்ற மாணவர்கள், ஆதார் எண் கோரி பதிவு செய்துள்ள மாணவர்கள் மற்றும் ஆதார் எண் பெற இதுவரை மனு செய்யாத மாணவர்களை கண்டறிந்து பள்ளி வாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் - சார்பு

SSA - STUDENTS DETAILS CALLED REG AADHAR REG PROC CLICK HERE...

AEEO seniority list 2015-16

https://app.box.com/s/iom1b3u3adcqj4jknvpd8khclh84gyd9

ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.

 பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

 பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது.

ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி

 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும்.

இதைத்தவிர 253 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 23 நகராட்சி பள்ளிகளும், புதிதாக தொடங்கப்பட்ட 5 அரசு தொடக்கப்பள்ளிகளும், 50 கள்ளர் பள்ளிகளும், 16 ஆதிதிராவிடர் பள்ளிகளும், 14 சுய நிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிக்கூடங்களில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படைப்பாற்றல் முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சரிவர வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிற நேரம், முடிவடையும் நேரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது. செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகியவை முறையாக கற்பிக்கப்படுகிறதா? என்று மாணவ–மாணவிகளிடம் கேட்டறிகின்றனர். 2 ஆசிரியர்களிடம் விளக்கம் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகிற சில பள்ளிக்கூடத்தில், ஒருநாள் விட்டு ஒரு நாள் ஆசிரியர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுகிற ஆசிரியர்களை கையும், களவுமாக பிடிக்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

27/06/2015 அன்று நடைபெற்ற உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான CRC இல் கலந்து கொள்ளாதவர்களுக்கு 04/07/2015 அன்று மீண்டும் CRC - கலந்துக் கொள்ள தவறுபவர்கள் மீது துறை ரதியான நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

6% அகவிலைப்படி உயர வாய்ப்பு: 01.07.2015 முதல் அகவிலைப்படி 113% லிருந்து 119% ஆக உயரும் என எதிர்பார்ப்பு

தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில்: 400 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்-


தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி
நிறுவனங்கள் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்பப்பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவகளை நியமனம் செய்தது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்தநியமிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதால் பெண்கள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படித்தனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு

அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு


தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஓமலூர்

தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் -4,5,6,7 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றமை -எரியாற்றல் சேமிப்பு சார்பாக புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளமை -குறித்து

பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து

 பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
         பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களுக்கான மேற்படிப்புச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுபான்மை உதவி தொகை பெற தேதி அறிவிப்பு


அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி
உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர்

பட்டதாரி பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

 ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை
       பட்டதாரி பதவி உயர்வுக்கு ரூ.750/-P.P(தனி ஊதியம் சேர்த்து) ஊதிய நிர்ணயம் செய்து திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் ஊதிய நிர்ணய உத்தரவு

RTE விதிகளின் படி மானவர் ஆசிரியர் விகிதம்

Pupil - Teacher Ratio in All Type of Schools - Click Here

CPS வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசானை வெளியீடு

GO 183 Date: 26.06.2015 - CPS Rate of interest for the year 2014-2015 and 2015-2016 - Click Here

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

CPS -அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு


  • CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு: GO: 124 Date: 22.4.2015

    CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

Important Educational Department Latest Government Orders

  • GO 124 Date: 22.4.2015 & GO 166 Date: 05.06.2015 - CPS Return Regarding Government Order with Amendment - Click Here

இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்

  'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

          பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த வேண்டும்; அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலையில், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற. முன் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஹெல்மெட் அணியலையா: நீதிமன்றம் அலைய தயாரா?

 'ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில், அதை அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றுகளின் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

            இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். மீறினால் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்; ஆவணங்களின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

            அசல் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 207ன்படி டூவீலர் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும். அதற்கான ஒப்புகை சீட்டு உரிமையாளருக்கு வழங்கப்படும்.பின், உரிய அசல் ஆவணங்களை, போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டுடன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு


தொடக்கக்கல்வி - அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில கல்வி ஒலிப்புமுறை" யை[PHONETIC METHODOLOGY] பயிற்றுவிக்க கொடுக்கப்பட்ட குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களும் அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காது கேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

       திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு) கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்: விற்பனை ஜரூர்!

தமிழகத்தில், கட்டாய, 'ஹெல்மெட்' சட்டம் நாளை அமலுக்கு வருகிறது. அதனால், அசல் மட்டுமின்றி, போலி ஹெல்மெட் விற்பனையும், இரட்டிப்பு விலைக்கு அதிகரித்து உள்ளது.

* இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும், ஐ.எஸ்.ஐ., தர முத்திரை உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்.

'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு, 12 மாநகராட்சிகள்; 'அம்ருட்' திட்டத்திற்கு, 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

         மத்திய அரசு, அடுத்த ஏழாண்டுக்குள், 100 ஸ்மார்ட் சிட்டிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதேபோல், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, அம்ருட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை நினைவு கூறும் வகையில், 'அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்டு அர்பன் டெவலப்மென்ட்' என, பெயரிடப்பட்டு உள்ளது.

01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மா நில பொறுப்பாளர்கள், ஜாக்டோ உயர்மட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Next Primary CRC Date: 11.7.2015


11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE-LETTER TO DISTRICT REGARDING DRAWING...

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!

 அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு ஊழியர்களின், 2014 - 15க்கான, ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, தமிழக முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில், ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.கணக்கு இருப்பு

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்: பல்கலை துணைவேந்தர் ஆலோசனை

 கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?

 தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால், ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

 அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

ஒப்பந்தம்:இதனால், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், அதிகரித்து வந்த கம்ப்யூட்டர் பாடப்பிரிவு, தற்போது அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வந்துவிட்டது.

AADHAAR EMIS SEEDING

CLICK HERE-AADHAAR NO ADD IN EMIS

மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான 90 சதவீத மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது: சேர்க்கைக்குழு செயலாளர் தகவல்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான 90 சதவீதம் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் டாக்டர் சுதா சதாசிவம் தெரிவித்தார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,939 இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது. மொத்தம்

web stats

web stats