பள்ளிகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேரும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....
🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.
EMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.மற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.
பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அ.தி.மு.க-வில் நிலவும் அணிகள் மோதலையடுத்து, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றப்பட்டார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.