rp

Blogging Tips 2017

உத்தரவு நகல்:போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு .ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

உத்தரவு நகல்:போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு .ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நீதிமன்ற உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவு .

INCOMETAX STATEMENT-2019 -EXCEL FILE-WITHOUT MACRO

INCOMETAX STATEMENT-2019 -EXCEL FILE-WITHOUT MACRO

CLICK HERE TO DOWNLOAD

மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் இன்று முதல் போராட்த்தில் பங்கேற்பு

DEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி யேற்றி குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு!

வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Image result for SBI Low Interest Rate Home Loans for Govt Employees

எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

SBI Low Interest Rate Home Loans for Govt Employees

🔰யாரெல்லாம் பெறலாம்!


இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.

எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு!


எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.


தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.


உங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது


வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் போராடுவதால், அப்பாவி மாணவர்களின்
கல்வி பாதிக்கப்படுவதால் போராட்டத்துக்கு தடை கேட்டு பிளஸ்-1 மாணவர் தொடர்ந்த வழக்கில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஜன.25-க்குள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மாணவர் தரப்பில் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி ஆஜரானார், அவரது வாதத்தில் பிப்- 1 முதல் செய்முறை தேர்வும், மார்ச்-1 முதல் ப்ளஸ்-2 பொது தேர்வும் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

அங்கன்வாடி மையங்களிலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில் 98% சதவீதம் இடைநிலை ஆசிரியர்கள் பணி ஏற்றுள்ளனர் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.. புதிதாக UKG சேர்ந்த மாணவர்களில் ஒருவன் அளித்த பகிரங்க பேட்டி..


22/1/19 ஜாக்டோ ஜியோ வட்டத்தலைநகர் ஆர்பாட்டம்-பத்திரிக்கையாளர் சந்திப்பு-டமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் செல்வ்ராக்


அவசியம் பார்க்க வேண்டிய கானொளி.பள்ளிக்கு செல்வோர் கவனத்திற்கு


ஜாக்டோ ஜியோ போராட்ட விளக்கப்பேச்சு


மதுரை கிளை-அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நமது சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குவிவரம்

 22/01/2019 காலை சுமார் 11: 20  நிமிடத்திற்கு அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நமது சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணைக்கு எடுக்கப்பட்டது விசாரணையின்போது முதலில் 40 நிமிடங்கள் இடைநிலை ஆசிரியர்  சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் திரு எஸ் ஆர் சுப்பிரமணியன் சென்னை வழக்கறிஞர் மதுரை கிளையில் ஆஜர் ஆகி நமது கருத்துகளை முன்வைத்தனர்,தொடர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துக்களை நீதியரசர் உள்வாங்கிக் கொண்டு பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவு பெற்றுக் கொண்ட பின்னர் அரசிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார் 30 நிமிடங்களுக்கும் மேல் அரசால் கேட்கும் எந்த கேள்விகளுக்கும், பதிலளிக்க முடியாமல் மிகவும் திணறிவிட்டது இறுதியாக NCTE விதிமுறைகளை பின்பற்றாமல் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களில்  நியமனம் செய்வது மிக தவறானது அங்கு இரண்டாண்டுகள் பயிற்சி அளித்துவிட்டு தான் நியமனம் செய்யவேண்டும். இதற்கு உங்களது தரப்பில் என்ன பதில் ?? என்றும்  மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்  RTE சட்டத்தின்படி தற்போது நியமனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அதை தாண்டி நீங்கள் எப்படி இந்த நியமங்களை மாற்ற முடியும் என்றும் இறுதியாக நாளை கடந்த ஐந்தாண்டுகளில் மாண்டிசோரி பயிற்சி முடித்து இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் பட்டியலை அரசு வழங்க வேண்டும் என்றும் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் இதுவரை நமக்கு வழக்கு மிக சாதாகமாகவே வழக்கு சென்று கொண்டிருக்கிறது.



 சென்னை உயர் நீதிமன்றத்திலும் நமது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது சார்ந்த இப்பொழுது நமது தரப்பில் பாடத் திட்டம் எதுவும்  உருவாக்கப்படவில்லை, விதிமுறைகளை பின்பற்றவில்லை கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்வது மிக தவறானது இந்த பயிற்சியை கொடுக்காமல் நியமனம் செய்வது அவசரகோலத்தில் எடுத்த முடிவாகும் என்று வாதிடப்பட்டது.
😤😟😟😟😟😟😟😤


(சென்னையில் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அங்கும் நமக்கு சாதகமாக இருக்கிறது.)

G.O.Ms.No.25 Dt: January 21, 2019 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1/ 1/ 2019 to 31/ 03 /2019 is 8%– Orders – Issued.

G.O.Ms.No.25 Dt: January 21, 2019 

Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1/ 1/ 2019 to 31/ 03 /2019 – Orders – Issued.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று  முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று  இயங்கவில்லை.
இந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ மாணவியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  
அதுமட்டுமின்றி போராட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாததால் அவர்களை வைத்து அரசு பள்ளிகளில் வகுப்பு எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதக அதன் பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். 



அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் கூட்டாக ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள கடிதம் சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் கூட்டாக ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள கடிதம்

_22.01.2019 முதல் நடைபெறும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

*🌟36 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என வழங்குவதை கைவிட்டு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம், குறைந்த பட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டுள்ளனர்.

வலுக்கிறது ஜாக்டோ-ஜியோ போராட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வலுத்துவரும் இப்போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKG மற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19


நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை!

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் ‌40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. புதிய மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 154 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய அறிவிப்பின்படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை


*இன்று (20.01.2019) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் கூட்ட முடிவுகள்:*

*1)22.01.18 (செவ்வாய்)முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்*

*2)22.01.18(செவ்வாய்) முற்பகல் 10.00மணியளவில்* *மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா)*
*தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.*

*3)23,24.01.19(புதன்,வியாழன்)மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.*

*4)25.01.19(வெள்ளி)அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.*

*5)மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.*

*6)26.01.18(சனி) சென்னையில்,மாநில்ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது*

அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.♨🎯
இன்று திருச்சியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்ட செய்திகள்

#காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம்,
கிராம நிர்வாக உதவியாளர்
முன்னேற்ற சங்கம்,
மதுரை மாநகராட்சி ஊழியர்கள்நல சங்கம் ஆகிய சங்கங்கள் ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.

web stats

web stats