rp

Blogging Tips 2017

LETTER REGARDING DOWNLOADING OF GPF ACCOUNT SLIPS

CLICK HERE............

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத்தேர்வை கணக்கில் கொள்ளாமல் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் தடை

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், ஆய்வு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மேல்முறையீடு: ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற
கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான,
பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.
இந்நிலையில், கோவை உட்பட பிற மாவட்டங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர்

ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண், கல்வித் தகுதி மதிப்பெண் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IGNOU- TERM END EXAMINATION JUNE 2015 RESULTS PUBLISHED

  • June 2015 Exam Result (New-I)

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணை வாபஸ்

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.

           இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

         வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் நடைபெறக்கூடாது என சென்னை உயர்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வாலாஜாபாதில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

       அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். இந்தக்

10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை

 'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.

கல்லூரிகளில் தொழிற்கல்வி துவங்க யு.ஜி.சி., அனுமதி

தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க, தமிழகத்தில் ஐந்து கல்லுாரிகள் உட்பட, 49 கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.

          கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தொழிற்கல்வி படிப்புகளை தொடங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள்

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள்

கல்வி கற்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போதுகேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி.,க்களில் இருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அவர், வேறு கல்லூரி,கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவ காரணங்கள், உயர்நிலை கல்வியில் போது பணி கிடைத்தது மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.

Re-classification/Upgradation of Cities/Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance (HRA) to Central Government employees.

Click Here - House Rent Allowance (HRA) to Central Government employees.

அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுநர்களின் பரஸ்பர பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

சுதந்திர தின விழா: மத்திய அரசு அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும், இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பிரதீப் குமார் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அமைச்சகச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி,

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கட்டுரை போட்டி - முதல் பரிசு ரூ.25000/- - இயக்குனர் செயல்முறைகள்!!

பள்ளிக்கல்வி - மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - 1 முதல் 75 வரையுள்ள தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 08.08.2015 அன்று சென்னை, தொடக்கக் கல்வி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமாக ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவுபெறும். பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், ஜூன் மாத மாணவர் சேர்க்கையின்போது விடுபட்ட மாணவர்கள், பள்ளியில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதை நிறைவு செய்யும் மாணவர்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.30 கட்டணம் செலுத்தினால் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை 333 இடங்களில் வழங்க ஏற்பாடு

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இ-சேவை மையம்:
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில்

உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக தலைமை ஆசிரியர்கள் 75 பேருக்கு 'புரமோஷன்' வாய்ப்பு

தமிழக தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை மறுநாள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
இத்துடன், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 75 பேருக்கு,

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - Provisional Selection List of Candidates for MBC/DNC Dept List Published

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 13 -  Click here MBC/DNC list 


Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 13 -  Click here ADW list 

In accordance with the direction in Government letter No.5852/B2/2014 MBC & DNC Dept. Dated 27.07.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Most Backward Classes and

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்!

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம்
கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி,இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது.

கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது!

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித்
துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பள்ளிக்கல்வி - பள்ளி வளாகத்திற்குள் பொருட்காட்சி நடத்த கட்டுப்பாடு - இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிகளில் பொருட்காட்சி: தடை விதித்தது கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், அந்தந்த பகுதி சார்ந்த வழிபாட்டுத் தல நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில், உள்ளூர் அமைப்புகள் சார்பில், பொருட்காட்சி நடத்தப்படுகிறது. 

பொருட்காட்சியில், குழந்தைகளை கவரும் வகையில், ராட்டினம் உட்பட, பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. கடந்த மாதம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தில், சொக்கநாதர் கோவில் விழாவை யொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது; அதில், ராட்டினங்களும் இடம் பெற்றன. திடீரென ராட்டினம் உடைந்து, 12 வயது மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்து பலியானான்; இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து, விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி வளாகங்களில் பொருட்காட்சி நடத்த தடை விதித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு:பள்ளி வளாகங்களில், ராட்சத ராட்டினம் போன்ற சாதனங்களால், திடீரென விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவியர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, வருங்காலங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான, பொருட்காட்சி அல்லது இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Training of primary and upper primary school teachers in teaching English (Developing reading, writing skills in english)

Primary: 4 days
I II III
17.08.15. 18.08.15. 19.08.15
24.08.15. 25.08.15. 26.08.15
31.08.15. 01.09.15. 02.09.15
07.09.15. 08.09.15. 09.09.15
Upper primary:2 days
I II III
14.09.15. 15.09.15. 16.09.15


21.09.15. 22.09.15. 23.09.15

பள்ளிக்கல்வி - 15/08/2015 அன்று சுதந்திர தினம் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்


2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது

குறிப்பு:
1. தங்கள் பள்ளி / அலுவலகங்களின் USER ID,  PASS WORD மூலம் உள்ளே சென்று MISSING CREDITS என்ற தலைப்பில் 4வதாக உள்ள 2014-15 MC ல் செல்ல வேண்டும்.
  • CLICK HERE TO GO THE CPS SITE

2. அதில் SELECT TOKEN NO என்பதை கிளிக் செய்தால் அதில் விடுபட்ட தொகைக்கான டோக்கன் எண்கள் வரும்.

3. அதில் ஒரு டோக்கனை செலக்ட் செய்தால் அதன் விபரங்கள் வரும். அதில் வலது ஓரத்தில் ADD NEW TRANS DETAILS என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட டோக்கனில் உள்ளவர்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக ஏற்ற வேண்டும்

தொடக்கக்கல்வி - 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)


தொடக்கக்கல்வி - AEEO/AAEEO 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலை தலைமையாசிரியர்களிருந்து உதவி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் "கலந்து கொள்ள தகுதிகள்" - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)

மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்-இணையதளம் வாயிலாக -இணையதள மாறுதலுக்கான விண்ணப்பப் படிவம்

  • 2015-16 | Online District Transfer Application - Click Here

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET

CLICK HERE-DEO-HALL TICKET-EXAM DATES 06.8.15,07.8.15 & 08.8.15

சிறுபான்மை கல்வி உதவித்தொகை:வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

'சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

             தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தொழில் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு படிக்க, சிறுபான்மையின மாணவருக்கு கல்வி

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் CRC மையக்கூட்டங்களில் கலந்து கொண்டு பனி செய்த நாட்களைஈடு செய் விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க தகுதி படைத்த அலுவலர் தொடர்புடைய தலைமை ஆசிரியர்!

  1. CRC Equal Special CL Permitted by HM [PDF Download] - Click Here

மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம். திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். வட்டார தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் பயிற்சி அளித்தார். பயிற்சியை சரியாக

தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்


தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்.

 பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான தேதியை பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. 

           ஆசிரியர்கள் பணியிட மாறுதல் வேண்டி 7ம் தேதி வரை விண்ணப்பிக்–கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தொடக்க கல்வித்துறையின் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் வேண்டி விண்ணப்பிக்க விரும்பினால் 6ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை 6ம் தேதிக்குள் அந்த பகுதியில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இன்ஜி., வகுப்புகள் இன்று துவக்கம்

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள், இன்று துவங்குகின்றன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள், அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. முதுகலை முதலாம் ஆண்டு இன்ஜி., வகுப்புகள், 17ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் சேர்ப்பு

அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 11,40,636-ஆக அதிகரித்துள்ளது.ஆறாம் வகுப்பில் 6,462 மாணவர்கள் கூடுதலாகவும், 9-ஆம் வகுப்பில் 7,482 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
           அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தலா முறையே 3,194, 6,099 குறைந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில் 9,496 மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்

2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATION COST RS-1000/-

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

 பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

        இது தொடர்பாக, கல்வி விவகாரங்களை கவனிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.ஊழல், முறைகேடு, வெளிப்படையான செயல்பாடு

தங்கம் வழங்கும் திட்டத்தால் புதுப்பலன் கிராமங்களில் பெண் கல்வி அதிகரிப்பு!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. 10ம் வகுப்பு படித்த, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

              பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்குவார்கள்.

தொடக்கக்கல்வி-2015-மாறுதல் குறித்த தகவல்கள்

தொடக்கக்கல்வி மாறுதல் விண்ணப்பம்   clik here
தொடக்கப்பள்ளி மாறுதல் கலந்தாய்வுஇயக்குனர் நெறிமுறைகள்   click here
தொடக்கக்கல்வி மாறுதல்அட்டவணைமற்றும் ஆணைகள்
clik here

மாறுதல் விண்ணப்பங்கள் -2015-(ஒரே இடத்தில்)

CLICK HERE

தொடக்கக்கல்வி - 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப படிவம்

தொடக்கக்கல்வி - 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப படிவம்
(தொடக்கக்கல்வி இயக்ககத்தால் வெளியிடப்பட்ட விண்ணப்ப படிவம்)CLICK HERE TO DOWNLOAD
கலந்தாய்வுக்கு விண்ணபிக்க உள்ளவர்கள் இந்த படிவத்தையே பயன்படுத்தவும்.

"சிறுபான்மையின கல்வி உதவித்தொகைக்கு சான்றிதழ்கள் அளிப்பதில் தளர்வு'

சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் சமர்ப்பிப்பதில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மற்றும் தொழில்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த. சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

தொடக்கக்கல்வி இயக்ககம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை


தனியார் பள்ளிகளுக்கு 'ஆன் - லைன்' வழி அங்கீகாரம்

ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு
உள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள் துவங்கப்படுகின்றன. 

பி.எட்., மாணவர் சேர்க்கை: ஆக., 7க்குள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.இந்த விதிமுறைகளுக்கு எதிராக, தனியார் கல்வியியல் கல்லூரிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. ஆனாலும், இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் உள்ள, 690 கல்லூரிகளுக்கும் என்.சி.டி.இ., அங்கீகாரம் அளித்துள்ளது.'இந்த ஆண்டு முதல், புதிய விதிமுறைகள் தான் பின்பற்றப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இதில் முடிவுகள் மாறும்' என, தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு இந்தப் படிப்புகள், ஓர் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாறுகிறது. இதற்கான புதிய பாடத்திட்டமும் அமலாகிறது.
பி.எட்., மாணவர் சேர்க்கை துவங்குவதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, உயர்கல்வி மன்றம் மற்றும்

மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும்: ஜேக்டோ உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று சென்னையில் நடந்த ஜேக்டோ உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்து பேசியதாவது: உங்களுடைய கோரிக்கைகள் வெற்றி பெறத்தான் போகிறது. அது எந்த வகையில் என்றால், தற்போது நடக்கும் ஆட்சியிலா அல்லது விரைவில் வரப்போகிற ஆட்சியிலா என்பதில் தான் உள்ளது.

ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கவுன்சலிங் 12ல் தொடக்கம்

தமிழக பள்ளி கல்வி இயக்ககம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
ஆகஸ்ட் 7 பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 12 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கவுன்சலிங். உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், இசையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் நடைபெறும்.
14ம் தேதி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சலிங்.

சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் சனிக்கிழமையன்று (ஆக.1) 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின்கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேக்டோ) சார்பில் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை ஆதரித்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியது வருமாறு:ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.6வது ஊதிய ஆணையக்குழு பரிந்துரைகளை அரசு அமலாக்குகிறபோது எங்கெல்லாம் முரண் இருக்கிறதோ, ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதோ, எங்கெல்லாம் குளறுபடி இருக்கிறதோ, அதைநீக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
கலாமை உயர்த்திய தமிழ்வழிக்கல்வி
மறைந்த மாபெரும் மனிதர் அப்துல் கலாமுக்கு நாடே அஞ்சலி செலுத்தியது. மொழி கடந்து, மதம்கடந்து, மாநிலம் கடந்து, அரசியல் கடந்து, அந்தமாமனிதரை மக்கள் ஆதரித்தார்கள். இந்த மாநிலத்தினுடைய கடைக்கோடியில் இருக்கிற இராமேஸ்வரம் தீவில்அவர் ஆரம்பகல்வியை தமிழ்வழியில் தான் கற்றார் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது. தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீங்களும் வைத்துள்ளீர்கள். இந்தக் கோரிக்கை ஆசிரியர்களுடைய கோரிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாகும். இதையும் மாநில அரசு நிறைவேற்றவேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம்.கடந்த காலத்தில் இது அமலாக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல் படி நியமனம் செய்யாமல், நுழைவுத் தேர்வு வைப்பதோ நேர்முகத்தேர்வு வைப்பதோ முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தாமல் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.
அரசுப் பள்ளிகளை மூடாதே
கடந்த 20 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளில் அதிகமாகி வருகிறது. அரசு தகவல்படியே மாநிலத்தில் உள்ள 1300 அரசுப்பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒருஅரசுப்பள்ளியில் 50 மாணவர்கள் படித்துவந்தனர்.பின்னர் அது பத்து மாணவர்களாக குறைந்து கடைசியில் 2 மாணவர்கள் மட்டுமே என்ற நிலை ஏற்பட்ட பிறகுஅந்தப்பள்ளியை அரசு மூடிவிட்டது. இதுதவறான முடிவாகும். அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருப்பது சமூகப்பார்வையுள்ள கோரிக்கையாகும். அதேநேரத்தில் மாணவர்கள் குறைவதை தடுப்பதில் அரசுக்கு முக்கியமான பங்கு இருந்தாலும் நமக்கும் அதில் பங்கு இருக்கிறது.ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டம்,அடிப்படை ஊதியத்தை பஞ்சப்படியோடு சேர்க்கவேண்டும் என்றுகோருவதைப் போல் தனியார்மயத்தை எங்களது இதயம் ஏற்றுக்கொள்ளாது என்று ஆசிரியர்கள் உரக்கச் சொல்லவேண்டும்.மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்க 1986ம் ஆண்டுதான் அரசுஆணை பிறப்பிக்கப்பட்டது.அப்போது இருந்த இந்தப்பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 30 தான். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் மெட்ரிக்குலேஷன் இயக்குநரகத்தை உருவாக்கினார்கள். 2001ம் ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை சுமார்3 ஆயிரம் ஆக உயர்ந்தது. அப்போது அந்தப்பள்ளிகளில் படித்தமாணவர்களின் மொத்த எண்ணிக்கை 11லட்சத்து 68ஆயிரமாகும். ஆனால் 2014 ஆம் ஆண்டுஇந்தப்பள்ளிகளின் எண்ணிக்கை 14,662 ஆக அதிகரித்து மாணவர்களின் எண்ணிக்கையும் 36 லட்சத்து 17ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உயர்கல்வி 90 சதவீதம் தனியார்மயமாகிவிட்டது. எம்.பி.பி.எஸ் படிக்கவேண்டுமா? 1 கோடி ரூபாய். இன்ஜினியரிங் சேரவேண்டுமா? பத்துலட்சம் அல்லது 15 லட்சம் ரூபாய் தரவேண்டும். எம்பிபிஎஸ் முடித்து எம் எஸ் ஆர்த்தோ சேரவேண்டும் என்றால் 5கோடி ரூபாய் கேட்கிறார்கள். இப்படி உயர்கல்வி எப்படிபடிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டதோ அதுபோல பள்ளிக்கல்வியும் தனியார் மயமாக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் செய்திடுக!
சென்னையில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் 56 மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன எனஅரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. அரசுப்பள்ளிகள் மூடாமல் இருக்க அங்கே அடிப்படைகட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. காலியிடங்களை நிரப்பவேண்டியுள்ளது. ஆங்கிலம் என்பது கட்டாயத் தேவையாகியுள்ள நிலையில் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து தனியார்பள்ளிகளைப்போல அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். இந்த கோரிக்கைகள் தொடர்பாக

8ம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற உத்தரவை ரத்து செய்கிறது மத்திய அரசு

எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என மத்திய மனித வளத்துறை
இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேசிய அவர், முந்தைய அரசுகளால் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தால், தொடக்கக் கல்வியின் தரம் மிகவும் குறைந்துவிட்டதாக கூறினார்.

G.O.Ms : 232 - பள்ளிக்கல்வி - 2015 - பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள்

பள்ளிக்கல்வி - பணியிட மாறுதலுக்கான கால அட்டவணை

சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் (பருவம் வாரியாக) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பள்ளிகள் துவங்கும் நாளில் இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டும் துவக்க நாளில் வழங்கப்பட்டன.

மாணவர் நலத்திட்டங்கள் குறித்து துறைச்செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் ஜூலை 29ல் நடந்தது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் குறித்த ஆய்வில் திருவள்ளூர், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை விட வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. சில தென்மாவட்டங்களில் வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.

பள்ளிக்கல்வி - பணியிட மாறுதலுக்கான கால அட்டவணை


பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என திருத்தி ஆணை வெளியீடு



Transfer Application for Elementary Education Dept Teachers

Elementary education :- Transfer Shedule

Elementary education :-
Transfer Shedule
Application receiving 31.07.2015 to 06.08.2015
1) AEEOs transfer and promotion 08.08.2015 Saturday
2) Middle HM transfer and promotion-16.08.2015 Sunday
3) BTs Deployment – 16.08.2015 Sunday
4) BTs transfer with in Union-16.08.2015 Sunday
5) BTs promotion – 16.08.2015 Sunday

ஆசிரியர் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு :தொடக்கக்கல்வி

ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல்

ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்து பங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

பள்ளிக்கல்வி - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கால அட்டவணை வெளியீடு

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 12.08.2015

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 14.08.2015

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 16.08.2015


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 18.08.2015


முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்) : 22.08.2015

ஆசிரியர் பொது மாறுதல்-2015-2016ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்-சார்ந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை


"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு -

[Press Note No : 056 ] Statement of the Honble Chief Minister on Dr. A P.J Abdul Kalams Birth Day
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் "டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்."டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின்


பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு -

அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் ஒருவர் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா?

பி.எட். படிப்பைப் பொறுத்தவரை அஞ்சல் வழியில் படிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்
ஒன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் ஏற்கனவே ஆசிரியராகப் பணி புரிந்திருப்பதுடன் தற்போதும் பணி புரிபவராக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5,500 உயர்நிலைப்பள்ளிகள், 5,900 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது உண்டு. அதன்அடிப்படையில் கடந்த வருடம் வரை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று ஒருவருடம் பணியாற்றினால் போதும். அந்த ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. அந்த நிலை மாறி அதை 3 வருடம் என்று பள்ளிகல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றியது. ஏற்கனவே இருந்தபடி ஒரு வருடம் என்று மாற்றவேண்டும் என்று ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டம் சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் சேவை கழக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் இரா.பிச்சை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் சேவை கழக செயலாளர் எஸ்.கார்மேகம், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, உமா, கருப்பசாமி, லதா, நரேஷ், பொன்னையா, செல்வராஜ், நாகராஜ முருகன், பாஸ்கரசேதுபதி, அமிர்தவல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது.

கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்த முடிவுகள் வருமாறு:-

* தொடக்க கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஒருவருடம் பணியாற்றினால் போதுமானது. (3 வருடத்தில் இருந்து ஒரு வருடமாக குறைக்கப்பட்டுள்ளது)

web stats

web stats