rp

Blogging Tips 2017

Thursday, 7 July 2016 த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நீட்டிப்பு செய்த அரசாணை எண் -169- Date 09/06/2016


பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

           பாரதியார் பல்கலைக் கழகத்தின் துறைகளிலும், பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் (முழு நேரம், பகுதி நேரம்) சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, உடுமலைப்பேட்டை கமலம் கலை, அறிவியல் கல்லூரி, உதகை, ஈரோடு

Press Release No : 327 Of the Honble Chief Minister on the Health Insurance Scheme for Government Employees - Dt. 7.7.2016

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசு ஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது.

என் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங் குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது.

மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்;

தவறுகளை களைய வேண்டும்; ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர்.

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை பொதுச் செயலர் செ.முத்துசாமி Ex.MLC, அமெரிக்காவில் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கம் கூட்டமைப்பு மற்றும் நியூ ஜெர்சி தமிழ் சங்கம் நடத்திய தமிழ் விழாவில் கலந்து கொண்டு பேசும் நிழற்பட ங்களும், அவருக்கு அங்கு வழங்கப்பட்ட விருதின் படமும் :

பள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை

'பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

HF பிடித்தம் ரூ.180 ஆக உயர்வு.

அரசு பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்- முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2016 ஜூலை 1 முதல் 2020 ஜூன் வரை 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது..
மாத சந்தா 180 ஆக உயர்ந்துள்ளது..

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் M.Phil பகுதி நேர படிப்பு வழங்குகிறது.

அகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான BRC, CRC பயிற்சிகள் விவரம் வெளியீடு



புதிய அமைச்சரவை பட்டியல்

நரேந்திர மோடி - பிரதமர், தனிநபர் நலன், பொதுமக்கள் குறைதீர், பென்ஷன், அணுசக்தி, விண்வெளித்துறை

கேபினட் அமைச்சர்கள்

1. ராஜ்நாத்சிங் - உள்துறை
2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை
3. அருண்ஜெட்லி - நிதித்துறை
4. வெங்கையா நாயுடு - நகர அபிவிருத்தி, வீட்டுவசதி, நகர்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் தகவல் தொடர்பு, ஒளிபரப்பு துறை.
5. நிதின்கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்துறை
6. மனோகர் பாரிக்கர் - பாதுகாப்புதுறை
7. சுரேஷ்பிரபு - ரயில்வே

பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான்.

ள்ளி கல்வி இணை இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.


  • பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், 
  • திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு.
  • இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள முனைவர் அ.கருப்பசாமி அவர்களுக்கும், முனைவர் முத்து பழனிசாமி அவர்களுக்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி

டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.
இந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.,ஜூலை 7 வியாழன் ரமலான் நோன்பு கொண்டாடப்படும்

நமது தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படிஎதிர்வரும் வியாழக்கிழமை   07.07.16   அன்று    ஈத் பெருநாள் ஆகும்.

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

மத்திய அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் பிரகாஷ் ஜவ்டேகர் ,

 மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் பிரகாஷ் ஜவ்டேகர் ,

சட்டத்துறை- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,

விளையாட்டுத்துறை- அமைச்சர் விஜய் கோயல் ,

ஜவுளித்துறை- ஸ்மிருதி  இரானி ,

 தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை - வெங்கைய நாயுடு,

புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை - சதானந்த கவுடா

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு க செல்வராஜ் அவர்களை வாழ்த்தி இயக்குனர்கள்சால்வை அணிவித்த மகிழ்ச்சியான தருணங்கள்

SCERT இயக்குனர் திரு இராமேஸ்வர முருகன் அவர்களுடன் சந்திப்பு

தொடக்கக்கல்வி இயக்குனருடனான சந்திப்பு நிகழ்வுக்




. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னையில் 4.7.2016 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு

ஆசிரியர்களின் பிரச்சனைகளைப் பற்றி கோரிக்கைகள் தந்து தொடக்கக்கல்வி இயக்குநருடன் அவர்களுடன் ஆலோசனை

  • Leave list April 2 ஆவது வாரமே கோடை விடுமுறை விட்டு திருத்தம் செய்ய வேண்டும்,
  •  ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்,
  •  மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு உடனே நடத்தப்பட வேண்டும்
  •  குறைதீர் கூட்டங்கள் உ.தொ.க, மா.தொ.க, தொ.க.இ அலுவலகங்களில் முறையாக 1,2,3 ஆவது வாரங்கள் நடத்தப்பட வேண்டும்,
  •  1990,91 - 800 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியப் பணி காலத்திற்குரிய ஈட்டிய விடுப்பு அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை விரைவில் செய்ய ஒப்புக் கொண்டார்
  • நிதியுதவிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
  • தொ.க.துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ப.ஆசிரியர்களோடு ஒருங்கிணைத்து முதுகலை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என நம் சார்பில் வலியுறுத்தப்பட்டதற்கு இது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக உறுதி அளித்தள்ளார்.
  • மோகனூர் ஒன்றியம் வள்ளியப்பம்பட்டி பள்ளிக்கு இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நியமனம் செய்வதாக தொடக்கக் கல்வி இய்க்குனர் இளங்கோவன் உறுதி அளித்துள்ளார்.
  • GO.25 ஐ ஆய்வு செய்து மாநிலம் முழுதும் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்

பள்ளிக் கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களோடு.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு


  • தொ.க.துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ப.ஆசிரியர்களோடு ஒருங்கிணைத்து முதுகலை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்   என்றும் 
  • அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் வழங்க கோரிக்கை
  • என நம் சார்பில் வலியுறுத்தப்பட்டதற்கு இது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக உறுதி அளித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு

மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஆசிரியர்களுக்கு எப்போதும் தான் உதவத் தயாராக இருப்பதாகக் கூறி, பொதுக்குழுக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தி அனுப்பினார்.


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர்மான்புமிகு பென்ஞமின் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு

கல்வி அமைச்சர் பெஞ்சமின், அவர்களை சந்தித்து  கோரிக்கைகள் வைத்த
போது....
..

மெட்ராஸ் உயர் நிதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆக பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்


புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

07.07.2016 அன்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை - நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படவேண்டும் - கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.

வழக்குகளால் ஸ்தம்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை

கல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்குகள் அதிகரிக்க, தெளிவில்லாத அரசாணை, துரித செயல்பாடுகள் இன்மை , அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அமைந்துள்ளது.

ரமலான் விடுமுறை ( வியாழன் ) சுப்ரீம் கோர்ட் சுற்றறிக்கை.

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

SSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன?
 அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

web stats

web stats