Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்டார்

அ.தி.மு.க-வில் நிலவும் அணிகள் மோதலையடுத்து, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றப்பட்டார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தக் கூட்டணி பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிளஸ் -2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாற்றம், பிளஸ்-1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு, மூன்று வகையான சீருடைகள், பள்ளிகள் திறக்கும் போதே பொதுத்தேர்வு தேதிகள் அறிவித்தல் என்று அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

* மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்.

* மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.

* அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.

* நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்துக் கேட்டு ஒரு வாரத்தில் பேரவையில் தெரிவிக்கப்படும்.

* 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

* சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்குப் புதுமைப் பள்ளி விருது வழங்கப்படும்.

* 7,500 ரூபாய் ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

* தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு.

* மாணவிகள் பயிலும் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் மற்றும் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்.

* அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் தொழில்நுட்ப நூல்கள் வாங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பம், கலைகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்குக் கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும்.

* சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பணியிடை பயிற்சி வழங்கப்படும்.

* மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும்.

* 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்குப் புதிய நூல்கள் வாங்கப்படும்.

* 3 கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்

* கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

* அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும்.

* சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

* கீழடியில் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்டவை குறித்து பழம்பெரும் நூலகம் அமைக்கப்படும்.

* மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment


web stats

web stats