Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment


web stats

web stats