Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர்கள் நான்காண்டில் பெறும் ‘டபுள் டிகிரி’ டெட் தேர்வு, பதவி உயர்வுக்கு பொருந்தாது: அரசு உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) ‘டபுள் டிகிரி’ தகுதியானது அல்ல என்ற அரசின் கொள்கை முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ‘‘ஆசிரியர்கள் 4 ஆண்டுகளில் ‘டபுள் டிகிரி’ படித்ததை ஏற்க முடியாது. அந்த பட்டப்படிப்பானது ஆசிரியர் பணி, பதவி உயர்வு பெற தகுதியானது இல்லை. அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் தகுதியானது இல்லை’’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு அறிவித்தது. இதை ரத்து செய்யக்கோரி சுமார் 200 ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து அரசு உத்தரவு செல்லும், எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து ஆசிரியர்கள், மேல் முறையீடு செய்தனர். அப்போது தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘டபுள் டிகிரி படிப்பு’ ஆசிரியர் தகுதிக்கு ஏற்றது அல்ல. 6 ஆண்டுகள் படித்தால்தான் டபுள் டிகிரி என்று கூற முடியும். 4 ஆண்டுகளில் டபுள் டிகிரி வாங்கியிருந்தால் செல்லாது. ஓராண்டு படித்ததும் ஒரு டிகிரி தருகிறார்கள். இது பெற்றதும் செல்லாதுÕ என்றார்.


இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘டபுள் டிகிரி விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு செல்லும். ஓராண்டு படித்து ஒரு டிகிரி பெற்றால் அது செல்லாது என்று அரசு கூறியது சரியானது தான். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment


web stats

web stats