இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூடுதலாக 15,800 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 1700 பேருக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்திலேயே நிலைமை உள்ளது. இது சரியானது அல்ல. மேலும், உயர்மட்ட நிபுணர் குழு திட்டக் குழுவிடம் அளித்துள்ள அறிக்கையில், நாட்டில் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment