பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்.,28க்குள் ஆன்-லைனில் பதிய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது.
இதன்படி அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிப்.,10ல் செய்முறை தேர்வு துவங்கி, பிப்.21க்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை 710, 101, மதியம் 2 மாலை 5 மணி என மூன்று பிரிவாக தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும், பிற பள்ளி ஆசிரியர் ஒருவர் புறத்தேர்வாளராக பணியாற்றுகிறார். தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு சில பள்ளிகளில் இன்று(பிப்.7) செய்முறை தேர்வு துவங்குகிறது. செய்முறை தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, உடனே ஆன்-லைனில் பதிய வேண்டும். பிப்.21க்குள் தேர்வுகளை முடித்து, அனைத்து தேர்வுகளுக்குரிய மதிப்பெண்களை பிப்.28ல் ஆன்லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment