தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
அதில், குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை, வரும், 22 முதல் 25ம்தேதிக்குள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment