Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats