நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துடன் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
இங்கு தலைமையிடமாக கொண்டு திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி செய்த போது இந்த அரண்மனை கட்டப்பட்டது. 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த அரண்மனை முற்றிலும் மரத்தாலானது. பச்சிலைச்சாறு, முட்டை வெள்ளைக்கரு, சிரட்டைக்கரி, சுண்ணாம்பு ஆகிய கலவையால் உருவாக்கப்பட்டது. 3 அடுக்கு கொண்ட இந்த அரண்மனையின் 3 வது அறையில் பத்மநாபசுவாமி அருள்பாலிக்கிறார். மன்னர் உடைவாள் உப்பிரிகை மாளிகையில் (தாய்க்கொட்டரத்தின் 3 வது நிலை ) இன்னும் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மாளிகை கெமிக்கல் முறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment