தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்போது இலவச சீருடை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய சமூகத்தைச்சார்ந்த மக்களின் பிள்ளைகளே பயில்கின்றனர் , சத்துணவு உண்பவர்களுக்கு மட்டுமே சீருடை அளிப்பது என்ற முடிவானது ,அரசே மாணவர்களிடையே பாகுபாடு உணர்வோடு செயல்படுகிறது என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் எழ வாய்ப்புள்ளது.மேலும் சீருடை என்பது மாணவர்களிடையே உயர்வு தழ்வினை போக்கி சரி நிகர் சமானம் என்ற கொள்கைக்கு முரண்பாடாக அரசின் இம்முடிவுஉள்ளது என்பதால்
அதனை போக்கும் விதத்தில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேறுபாடின்றி இலவச சீருடை இக்கல்வியாண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் க்
1.கல்வித்துறை செயலர்
2.தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம்
மனுக்கள் அளிக்கப்பட்டன.தொடக்கக்கல்வி இயக்குனர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்
No comments:
Post a Comment