Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும் நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை 8.30 முதல் மதியம்12.30மணி வரை மட்டுமே இயங்க ஏதுவாக கால அட்டவனை மாற்றம் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பௌர்ணமி என்றால் திருவண்னாமலைஎன்னும் அளவிற்கு இன்று திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.
                 அன்றையதினம் பல லட்சம் மக்கள் கிரிவலம் வர  திருவண்ணாமலையில் கூடுகிறார்கள், கிரிவலப்பாதையிலேயே 8 நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன
            பிற பள்ளிகள் திருவண்ணாமலைக்கு வரும் முக்கிய சாலைகளில் இயங்குகிறது.
திருவண்ணாமலையில்  பௌர்ணமி கிரிவல நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம், வாகனங்களின் தொடர் அணிவகுப்பு, போக்குவரத்து நெரிசல், வியாபாரத்திற்காக தற்காலிக க்கடைகள் திடீர் தோற்றம் இதன் காரணமாக தொடக்க /நடுநிலைப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில் தடப்பிரச்சினையில் பெறும் சிக்கல் உள்ளது

குறிப்பாக மாணவர்கள் வீட்டிற்கு 4.10 க்கு பிறகு செல்வதில் கடினம்,
கிரிவலப்பாதையில் உள்ள பள்ளிகட்கு மாணவர்களை மதிய பாட வேளைக்கு பெற்றோர்கள் அனுப்பாமை,

கிரிவலம் செல்ல மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்லுதல்
கூட்ட நெரிசலில் சின்னஞ் சிறிய மாணவர்கள் சிக்குவதால் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சமாக உள்ளது
                நகரில் உள்ள தனியார் சுயநிதிப்பள்ளிகள் அனைத்தும் ஒரு வேளை இயங்கி இப்பிரச்சிணையில் இருந்து மீள்கின்றனர்

எனவே மேற்கண்ட காரணங்களைக்கருத்தில் கொண்டு
மாதந்தோறும் வரும்  பௌர்ணமி நாட்களில் மட்டும் நகரில் இயங்கும் நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகட்கு பள்ளி வேலை நேரம் காலை8.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை மட்டும்  இயங்கும் விதத்தில்  பள்ளி நேரம் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
1.பள்ளிக்கல்வி இயக்குனர் ,
2. கல்வித்துறை செயலர் 
ஆகியோர்களுக்கு தனித்தனியே நேரடியாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் மாநிலப்பொறுப்பாளர்கள்  மாநில தலைவர்  கு.சி.மணி, மாநில துணைத் தலைவர் கே.பி.ரக்‌ஷித் மற்றும் தலைமை நிலைய செயலாளர் க.சாந்தகுமார், ஆகியோர்.சந்தித்துகோரிக்கை மனுக்களை அளித்தனர்

                   தொடக்கக்கல்வி இயக்குனர்  அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி அரசின் ஆணை பெற தக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats