இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளைப்போக்கும் வண்ணம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
கடந்தாண்டில் அந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தீர்க்கக்கோரிமனு அளிக்க இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டில் மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை நாளாக அமையுமாறு நாட்காட்டி (year plan) தயாரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,
அதை கேட்ட இயக்குனர் ,உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உதவியாளரிடம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாதத்தின் முதல் சனிக்கிழமைகள் விடுமுறை நாளாக அமையுமாறு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
இயக்குனர் கோரிக்கை கேட்ட அந்நொடியே கோரிக்கையின் உண்மையை உணர்ந்து நடவடிக்கை எடுத்து,நிறைவேற்றியமையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றியுடன் பாராட்டுகிறது
No comments:
Post a Comment