12.05.2014 பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் மாஅநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி அதாவது அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியிடத்துடன் பனி ஈர்ப்புக்கு அனுமதித்தல் என்பதை அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பின்மை தெரிவித்தால், அப்பணியிடத்திற்கு அவ் ஒன்றியத்தில் உள்ள மற்ற விருப்பமுள்ள (அதே பாடத்தின்) பட்டதாரிஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி ஈர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .
இதனால் தொடக்கக்கல்வித்துறையில் பணியிறக்கம் (POST REVERSION.) தவிர்க்கபடும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இயக்குனர் கண்டிப்பாக இவ்வாண்டு பணி ஈர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.அதற்கான உத்திரவு மாறுதல் வழிகாட்டு நெறி முறைகளில் வெளியிடுவதாக உறுதி அளித்தார்
இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, மாநில துணைத் தலைவர் ரக்ஷித் மற்றும் தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment