அரசு பள்ளிகளில் பாடஇடைவேளையில்‘கட்’ அடிக்கும்மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும்முறை அறிமுகப்படுத்த வேண்டும்என பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர். பல பள்ளிகளில்மாணவர்கள் காலையில் வகுப்புக்குவந்து விட்டு,இடைவேளையில் வகுப்பை,‘கட்’ அடித்து விட்டு சென்றுவிடுகின்றனர்.
இவர்கள் ஏதாவது பிரச்னையில்சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்தநேரத்தில் பள்ளியில் இருந்ததுபோன்றே ஆவணம் இருக்கும்.பெற்றோரும் தங்கள் பிள்ளைகள்பள்ளியில் இருப்பதாகவேநினைப்பர். ஆனால், திருவள்ளூர், பூண்டி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருமழிசை உட்பட பல பகுதிகளில்மாணவர்கள் பள்ளி நேரத்தில்வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள்கூறுகையில்,பள்ளிகளில்ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது,மாணவர்களின் இருப்பை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின்பெற்றோருக்கு பள்ளியில் இருந்துபோனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்துவரச் சொல்லி விளக்கம் கேட்டுமாணவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள்கூறுகையில்,‘இந்த திட்டம் ஊர்சுற்றும் மாணவர்களைதிருத்துவதுடன், மாணவர்களுக்குதேவையில்லாத பிரச்னைகள்ஏற்படாமலும், பெற்றோரின்நம்பிக்கையை உறுதி செய்வதாகவும்இருக்கும். அதனால், அனைத்துபள்ளிகளிலும் ஒவ்வொரு பாடவேளையிலும் வருகை பதிவு செய்யகல்வித்துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். எனவே, அரசு பள்ளிகளில்பாட இடைவேளையில்,‘கட்’ அடிக்கும்மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறைஅறிமுகப்படுத்த வேண்டும் எனபெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
எல்லாம் காதல் மயக்கம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர்கூறுகையில், சினிமாவும், டிவியும்பள்ளி மாணவ, மாணவியரின்எதிர்காலத்தை பாழடித்துவருகின்றன. பொழுது போக்குசாதனங்களின் நிகழ்ச்சிகளில்மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல்வயப்பட்டு விடுகின்றனர். தங்களதுஎதிர்காலம் என்னாகும் என்பதுகுறித்த அச்சமின்றி, காதல்வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிமாணவிகளுடன் சிலர்செல்கின்றனர். ‘’பிள்ளையைகாணவில்லை’ என பெற்றோர்அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்தமுடியாது என்பதால், அவர்களை தேடிகண்டுபிடித்து பெற்றோரிடம்ஒப்படைக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment