இடைநிலை ஆசிரியர் ஊதியம்,PB-2=9300-34800 என்றஊதிய விகிதத்தில் தர ஊதியம் 4200ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்தும் விதமாக அனைத்து சங்க பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திட 5 நபர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவை அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டது
No comments:
Post a Comment