"ஊதிய உயர்வு விவகாரத்தில் பாராட்டிய சங்கங்கள், உண்மை நிலை தெரிந்ததும், அதிருப்தியடைந்து போராட்டத்தை அறிவித்து உள்ளன. தி.மு.க., ஆட்சி தான், அரசு அலுவலர்களுக்கு பொற்காலம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த, 1989ல், தி.மு.க., மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதும், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், 2012ல், கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு பரிந்துரைப்படி, ஒரு சில அரசு அலுவலர்களுக்கு, ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இதுதான், 26ம் தேதி, "அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு, அரசு ஊழியர் சங்கம் வரவேற்பு' என்று, செய்தியாக வெளிவந்து உள்ளது. ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்து கொள்ளக்கூட நேரமில்லாமல், ஊதிய உயர்வு அளித்த முதல்வருக்கு, பல்வேறு சங்கங்களும் நன்றி தெரிவித்திருந்தன. அடுத்தடுத்த நாட்களில், ஊதிய குளறுபடிகள் தெரிந்து, அதிருப்தியை வெளியிட்டு, போராட்டங்களை அறிவித்துள்ளன. அரசு ஊழியர்களை கைது செய்ததோடு, 1.70 லட்சம் ஊழியர்களை, ஒரே நாளில் வேலை நீக்கம் செய்த அ.தி.மு.க.,வையுயும், தி.மு.க., ஆட்சியில் வாரி வழங்கியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தி.மு.க., ஆட்சி பொற்காலம் என்பதை, அரசு அலுவலர்கள் நன்கு அறிவர். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment