Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் .தினகரன் செய்தி

(இந்த பிரச்சினையை நேற்றே தொடக்கல்வி இயக்குனர் கவனத்திற்குகொண்டுசென்றுள்ளது.நமது சங்கம். விரைவில் அரசிடம் கொண்டுசெல்ல உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இன்று நாமக்கல் நகரில் நடைபெறும் அவசர செயற்குழுவில் இது சார்ந்து விவாஅதித்து முடிவெடுக்க உள்ளது தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி)
ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.அந்த ஆரம்பக் கல்வ¤யை புகட்டும் ஆசிரியர்களுக்கே ஊதியக்குழு முரண்பாடுகளால் சோதனை வந்திருக்கிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.



இவர்களில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 44 ஆயிரத்து 905 பேர். 9 ஆயிரத்து 969 பேர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். 55 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். எஞ்சிய ஒரு லட்சத்து 1,126 பேர் இடைநிலை ஆசிரியர்கள். எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் இவர்களது குரல் இன்று வரை அரசின் செவிகளில் ஒலிக்கவில்லை.

மத்திய அரசின் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் அரசு ஆணை எண்.234ன் படி 1.6.2009 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.5,200 ரூ. 20,200 தர ஊதியம் ரூ.2,800 (பே பாண்ட் 1) அறிவிக்கப¢பட்டது. மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.9,300 ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 (பே பாண்ட் 2) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் வேறுபாடு இருப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குரல் எழுப்பினர். மத்திய அரசுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இதைத் தொடர்ந்து ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதற்காக ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. பின்னர் சாதாரண நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 சிறப்பு ஊதியமும், தேர்வு நிலை, சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு படியும் வழங்க அரசு உத்தரவிட்டது.

எனினும் தங்கள் ஊதிய விகிதத்தை ‘பே பாண்ட் 2‘க்கு மாற்ற வேண்டும் என்பதில் இடைநிலை ஆசிரியர்கள் உறுதியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து ஊதியக்குழு முரண்பாடுகளை களைய கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அரசு ஆணை எண்.123ன் படி தமிழக நிதித்துறை செயலாளர் க¤ருஷ்ணன் (செலவுகள்) தலைமையில் மூன்று நபர் கமிட்டியை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழுவினர் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை அழைத்து கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி முதல் 11ம¢ தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள மாநில உயர் கல்விக் குழும அரங்க¤ல் பேச்சுவார்த்தை நடத்தினர். இத¤ல் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர் சங்கங்கள், தங்களுக்கு ஊதியக் குழு முரண்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகளை பட்டியலிட்டனர்.

ஓராண்டுக்கு பிறகு கிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் 88 அரசு ஆணைகளை கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போதிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் 3 நபர் குழுவை அறிக்கையை எதிர்பார்த்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், 3 நபர் கமிட்டி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 88 அரசு ஆணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போதிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இதற்காக அனைத்து சங்கங்களுடன் இணைந்து தொடர் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவதாக மாநில அரசுகள் கூறி வந்தாலும், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை இன்று வரை கானல் நீராகவே இருந்து வருகிறது.

தலைகீழ் மாற்றம்:

* 6வது ஊதியக்குழுவிற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.4,500ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.5,500ம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.6,500ம் வழங்கப்பட்டது.

* 6வது ஊதியக் குழுவிற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.13,900, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.14,100 என அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.

* இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ரூ.1000 மட்டுமே இருந்து வந்த வித்தியாசம் 6வது ஊதியக்குழுவிற்கு பிறகு ரூ.5,900 ஆக அதிகரித்தது.

*இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

* மத்திய அரசில் 10 முதல் 20 ஆண்டு வரை ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை என தனி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

* தமிழக அரசை பொறுத்தவரை 1.1.2006க்கு முன்பு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே அதற்குரிய ஊதிய விகிதம் வழங்கி வருகிறது.

* 1.1.2006க்கு பிறகு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் ஊதிய விகித மாற்றம் இல்லாததால் அதற்கான ஊதியத்தை இன்று வரை இழந்து வருகின்றனர்.

உறுதிமொழி என்னாச்சு?

ஊதிய விகிதம் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அரசு பிளீடரிடம் எழுத்துபூர்வமாக பதில் அளித்த ஊதிய முரண்பாடுகள் களைதல் குழுவின் தலைவர் கிருஷ்ணன், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித மாற்றம் தொடர்பான கோரிக்கையை தமிழக அரசின் நிதித்துறை ஊதிய முரண்பாடுகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப¤யுள்ளது. ஊதிய முரண்பாடுகள் களைதல் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு ஆய்வு செய்து தேவையான ஆணைகளை பிறப்பிக்கும் என கூறியுள்ளார். இதனால் ஊதிய விகிதம் எப்படியும் மாறும் என நம்பியிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats