Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர்.
முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.
தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை, முழுவீச்சில் செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இவ்வாறு, விபு நய்யார் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு செய்யும் பணியை செய்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, இதுவரை பதவியில் இருந்த தலைவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பதவியேற்றுள்ள புதிய தலைவராவது, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கவும், டி.ஆர்.பி.,யின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats