நாமக்கல் நகரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு தீர்மானங்கள் வருமாறு
=> ஊதியக்குறைதீர் குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணைகளில் இடைநிலை ஆசிரியர் தர ஊதிய உயர்வு முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளதை செயற்குழு அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.
=> இடைநிலை ஆசிரியர் ஊதியம்,PB-2=9300-34800 என்றஊதிய விகிதத்தில் தர ஊதியம் 4200ஆக உயர்த்த வே ண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டராங்களில் உள்ள உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்கள் முன்பாக 13/08/13 செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
=> நாளை 5/8/13 முதல் 12/08/13 வரையிலான காலத்திற்கு கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது எனவும் தீர்மாணிக்கப்பட்டது
=> மேலும் 5/09/13 அன்று மாவட்ட த்தலைநகரில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும்
ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய 5 நபர் குழு அமைப்பு
அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்தும் விதமாக அனைத்து சங்க பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திட 5 நபர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவை அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த ஆசிரியர்சங்கங்களின் கூட்டு போராட்டத்தை நடத்துவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட வழிவகை செய்ய இச்செயற்குழு கேட்டுக்கொண்டது
தீர்மான நகல் பார்வையிட
No comments:
Post a Comment