TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
Income Tax -2018 calculator-(A4-2page with form16)
பள்ளி மாணவர்களின் அடிப்படை அறிவை ஆய்வு செய்ய உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கில, கணித பாடங்களின் அடிப்படை அறிவை மதிப்பீடு செய்து, ஆக.19ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 152 ஆசிரிய பயிற்றுநர்கள், 11 வட்டார மேற்பார்வையாளர்கள், 22 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்தகொண்டனர். கூட்டத்தில் முதன்மைகல்வி அலுவலர் பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் அடிப்படை அறிவான தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சரளமாக படிக்க, பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணித செயல்பாடுகளை சரி செய்ய வேண்டும். இதுவே மாணவனுக்கு தரமான கல்வி வழங்கியதற்கான முறையாக கருதமுடியும். இவ்விஷயத்தில் ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போதுள்ள கற்றல் திறனை அளவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தல், எழுதுதல் திறன், அடிப்படை கணித செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் மதிப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்து பெறப்படும் படிவத்தை, வட்டார அளவில் தொகுத்து கணினியில் பதிவு செய்து, ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் மாடசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment