Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன்
அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெளிவிரை கடிதத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அரசாணை  எண் .18ன் படி ஊக்க ஊதியம் பெற்று கொள்வதற்கான வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கெனவே  ஆசிரியர்கள் பெற்ற எம்.பில்., ஊக்க ஊதியத்தை திரும்ப அரசு கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தபின்பே தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment


web stats

web stats