Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

கல்வி அதிகாரி உத்தரவு ரத்து ஆசிரியர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதா?

நாகப்பட்டினம் வேதாரண்யம் வட்டத்தை சேர்ந்த வீரக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: திருவாரூர் மாவட்டம் செங்கலூரில் உள்ள முஸ்லிம் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி சேர்ந்தேன்.
இதற்கு அங்கீகாரம் கேட்டு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். இதை அதிகாரி பரிசீலனை செய்து மே 1ம் தேதி முதல் அங்கீகாரம் தர முடியாது. 

ஏனெனில் மே மாதம் கோடை விடுமுறையில் இருப்பதாலும், கல்வி ஆண்டின் இறுதியாக இருப்பதாலும் ஜூன் 1 முதல் தான் அங்கீகாரம் தரப்படும் என்று உத்தரவிட்டார். 
ஆனால் அதே அதிகாரி, வேறு பள்ளியில் சேர்ந்த ஆசிரியைக்கு ஏப்ரல் முதல் அங்கீகாரம் கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு மாதம் ஸீ 8500  அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் எனக்கு  4500 வழங்கப்படுகிறது. எனக்கு உடனே அங்கீகாரம் கொடுத்திருந்தால் 6வது ஊதிய குழு பரிந்துரையின்படி பெண் ஆசிரியைக்கு இணையான சம்பளம் கிடைத்திருக்கும். 

எனவே கல்வி அதிகாரி உத்தரவை ரத்து செய்து, எனக்கு மாதம் 8500 அடிப்படை ஊதியமும், அன்றைய தேதியில் இருந்து நிலுவை சம்பளமும் தர உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, ஆசிரியர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக்கூடாது, கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே மே மாதம் அங்கீகாரம் தர மறுத்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்கும் பெண் ஆசிரியைக்கு இணையான சம்பளம் தர வேண்டும். பணியில் சேர்ந்த காலத்தில் இருந்து கணக்  கிட்டு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி ஆஜரானார்.

No comments:

Post a Comment


web stats

web stats