Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர்கள் பற்றாக்குறை; கேள்விக்குறியாகும் கல்வி

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களே ஆசிரியர் ஆன அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் அடுத்த அணியாலை காம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 106 மாணவர்களும், 107 மாணவிகளும் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எட்டு ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தலா இரண்டு
அறிவியல் ஆசிரியர்கள், சமூக அறிவியல் ஆசிரியர் என நான்கு பேர் மட்டும் பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால் மாற்று ஆசிரியர்களுக்கு வழியில்லை, நிரந்தரமாக ஆசிரியர் பற்றாக்குறையால் தவிக்கும் சூழ்நிலையில்,ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால் மேலும் சிக்கலான நிலை ஏற்படுகிறது.
இதனால், பள்ளிக்கு விடுமுறை விடுவதை தவிர வேறு வழி இல்லாத நிலை ஏற்படும் போது மாணவர்களே ஆசிரியராக மாறி பாடம் நடத்துவதால், பள்ளிக்கு விடுமுறை விடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த எட்டாண்டுக்கு முன் பி.டி.ஏ., மூலம் அரசுக்கு, 2 லட்ச ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட்டும், இன்று வரை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. இப்பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இருந்தும் கூட மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை.
"மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்" என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment


web stats

web stats