ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிஆர்பியின் இணையதளத்தில் ஹால்டிக்கெட்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை
நிரப்ப உள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை அறிவித்துள்ளது. இத் தேர்வு வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வை 2 லட்சத்து 68 ஆயிரத்து 160 பேர் எழுத உள்ளனர். 18ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2ம் தாள் தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகி றது. டிஆர்பியின் இணையதளமான www.trn.tn.nic.in என்ற முகவரியில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment