பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வருகிற 11ம்தேதி (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி, 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை, 15ம் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை, 16ம் தேதி (வியாழக்கிழமை) உழவர் திருநாள் அரசு விடுமுறை, 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைபூசம் கடலூர் மாவட்டத்தில் விடுமுறை, 18ம் தேதி (சனிக்கிழமை) வழக்கமான அரசு அலுவலகங்கள் விடுமுறை, 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை
.
அரசு அலுவலகங்கள் 13ம் தேதி போகிப்பண்டிகை அன்று இயங்கும், 18ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும். அரசு அலுவலர்கள் 13ம் தேதியும், ஆசிரியர்கள் 18ம் தேதியும் விடுப்பு எடுத்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment