5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 3 January 2014

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு


காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.

அதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதில் பள்ளியின் பெயர், ஓய்வுபெறும் ஆசிரியர், பாடம், மொழி, எந்த தேதி முதல் காலியாக உள்ளது, காலியேற்பட காரணம், யாரால், எதனால் பணி ஓய்வு, பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ள அரசாணை எண் மற்றும் நாள், உபரி பணியிடம் நிரப்ப தகுதியில்லை எனில் அது தொடர்பான விபரம் போன்றவற்றையும் முழுமையாக சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) பாலமுருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats