5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 4 January 2014

கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்

ல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச வினா-விடைப் புத்தகம் வழங்கும் விழா மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில்,மாணவ, மாணவிகளுக்கு வினா-விடைப் புத்தகங்களை வழங்கி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது: தேர்வுகளை எப்படி அணுக வேண்டும், எந்தெந்த வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுடன் உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்களும் இதில் அடங்கியுள்ளன. அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், காலணி, புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மேல் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு, நகர செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் மற்றும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


web stats

web stats