நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டுகள் ஆகிறது.தற்போது இந்தியா அவரது காலடியை பின்பற்ற தயாராகிறது.இந்திய விமானப்படை நிலவில் மனிதனை குடியேற்ற திட்டங்கள் தீட்டி அதற்கான ஆயுத்த பணியில் இறங்கி உள்ளது.
சந்திரனுக்கு மனிதனை அனுப்பவும் அதற்கன ஒரு நபரை தேர்வு செய்யவும் மற்றும் தேவையான சோதனைகள் மேற்கொள்ளளவும் இந்திய விமான படைக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதகவலை ஏர் மார்ஷல் டி.பி. ஜோஷி, ஆயுதப்படை பொது இயக்குனர் ( மருத்துவ பிரிவு) ஒரு டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
நிலவுக்கு மனிதனை அனுப்பபுவதற்கும் நபரை தேர்ந்து எடுப்பதற்கும் இஸ்ரோவுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த திட்டத்திற்கா க இந்திய விமானப்படை ஒரு குழுவை அமைத்துள்ளது.
இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நாங்கள் எங்கள் பணியை தொடங்கிவிட்டோம். நாங்கள் ஆய்வுக்கு உரிய சில உபகரணங்களை இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டோம் என ஏர் மார்ஷல் ஏ.கே.பெகல் தெரிவித்து உள்ளார்.
நிலவுக்கு செல்லும் திட்டத்திற்கு தகுதியான நபர் போர் விமான விமானிகளே என இந்தியன் விமானப்படை கருதுகிறது.
No comments:
Post a Comment