சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என 133 அதிகாரங்களில் 1330 குறள்களை இயற்றியுள்ளார்.
இதில் எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கருத்துக்களை கூறியுள்ளார். திருக்குறளை போல இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் வீரபத்திரன் புதிய திருக்குறளை எழுதி உள்ளார்.
இதில் எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கருத்துக்களை கூறியுள்ளார். திருக்குறளை போல இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் வீரபத்திரன் புதிய திருக்குறளை எழுதி உள்ளார்.
இந்த புதிய திருக்குறளில் கம்ப்யூட்டரும்–மனிதனின் பயன்பாடுகள் குறித்தும், தெளிவுரை எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், எளிமை நடையிலும், அடி, சீர், தொடை மற்றும் எவ்வித இலக்கணமும் மாறாமல் வள்ளுவர் எழுதிய திருக்குறள் அடிப்படையிலும், 1ž அடியில் 1360 புதிய திருக்குறள்களை இயற்றி உள்ளார்.
இதனை புதிய திருக்குறள் என்ற பெயரில் நூலாக வெளியிட தயாராக உள்ளதாகவும், திருக்குறளை விட 30 குறள்களை அதிகமாக எழுதியுள்ளேன். எனவே இதனை கின்னஸ் சாதனையில் பதிய திட்டமிட்டு உள்ளதாகவும் வீரபத்திரன் கூறினார்.
இந்த 1360 குறள்களை எழுதுவதற்கு அவருக்கு 3 வருட காலம் ஆகி விட்டது. இதனை பார்த்த புதுவை முதல்வர் ரங்கசாமி அவரை பாராட்டி வாழ்த்துரை அனுப்பியுள்ளா
No comments:
Post a Comment