Friday, 18 July 2014

எச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்

உலக அளவில் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்தில் நான்கு பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், எச்.ஐ.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் வரும் 2030ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதிலும் 35 கோடி பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. அவர்களில், 19 கோடி பேருக்கு தங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது பற்றித் தெரியவில்லை.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களில் ஆப்பிரிக்க துணைக் கண்டத்தையடுத்து, ஆசிய பசிபிக் நாடுகளில்தான் அதிக அளவில் உள்ளனர்.

2013ஆம் ஆண்டின் கணக்கின்படி, ஆசிய பசிபிக் பகுதிகளில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் 48 லட்சம் பேர் உள்ளனர்.

அதில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி. பாதிப்புடன் உள்ளனர்.

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புடன் 21 லட்சம் பேர் உள்ளனர்.

இந்தியாவில் 51 சதவீத மரணங்கள் எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையவை. ஆனால், 36 சதவீதத்தினர் மட்டுமே எச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்படுவது 19 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், ஆசிய பசிபிக் பகுதிகளில் புதிதாக 38 சதவீதத்தினருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2005-2013ஆம் ஆண்டுகளிடையே, எய்ட்ஸ் தொடர்பான மரணங்கள் 38 சதவீதம் குறைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனினும், அஸ்ஸாம், பிகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats