Wednesday, 16 July 2014

அரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வளர்கின்றன. தீர்வு என்ன?


இதற்குத்தீர்வாக, சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:இந்த சூழ்நிலை மாறி, அரசு பள்ளிகள் உயிர்பெற வேண்டுமானால், 'அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் படும் சிரமங்களை, கல்வி அதிகாரிகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகள் மேம்பட, மக்களின் பங்களிப்பும் வேண்டும்' என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.'

தரமான கல்வி, அரசுப் பள்ளிகளில் தான் கிடைக்கும்' என்று, மக்களுக்கு நம்பிக்கை வரும்படி, கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.இதெல்லாம் நடந்தால் மட்டுமே, அரசு பள்ளிகளில் தொங்கும் பூட்டுகள் விடுதலை பெறும்.

குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழகம் திகழும்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளிகளின் ஆயுள்?

ஆசிரியர்கள் சொல்வது போல், 'அரசுப் பள்ளிகளை ஒழித்து கட்டும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவோ?'

என, சிந்திக்க வைக்கும் வகையில்,

சில பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats