''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.லோக்சபாவில் நேற்று அவர்கூறியதாவது:நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது, 1998ல், 58லிருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த வயதை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு, ஜிதேந்திர சிங் கூறினார்.
No comments:
Post a Comment