Friday, 18 July 2014

அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி!

தமிழக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், ''தமிழகத்தில் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் 4,782 மாணவிகள் பங்கு பெறுவார்கள்.

மேலும், கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 32,563 பேருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அதேபோல், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு சாதனங்கள் வழங்கப்படும்.
2014&15 கல்வி ஆண்டில் காலியாக உள்ள 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல், 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பபடும். மாவடட நூலகங்களில் உறுப்பினராக சேரும் முதல் 100 குழந்தைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்படும்'' என்றார்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats