Friday, 18 July 2014

எம்.பி.பி.எஸ்.: ஜூலை 21-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 27-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதுப்பித்தல் அனுமதி (100 எம்.பி.பி.எஸ். இடங்கள்), திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் 25 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 175 இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது; இந்தக் கல்லூரிகளிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்கு 149 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி: சுயநிதி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பிக்கும் சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிக்கும் அரசு கல்லூரி என்ற அடிப்படையில் எம்.சி.ஐ. சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்து விட்டது. இதையடுத்து கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்; இந்த இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

சுயநிதி அரசு பி.டி.எஸ்.: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலியிடங்கள் எவ்வளவு?

சென்னையில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்தும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன.

முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று உரிய அரசு மருத்துவக் கல்லூரி-சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராத மாணவர்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேராத மாணவர்கள் என 28-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்து விலகி பி.இ. படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats