65 வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்த்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 56 பேர் கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) ஓய்வு பெற்றனர். 240 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 80 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளது. தொடக்க கல்வி இயக்குனரின் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.
இப்போது அந்த முறை அடியோடு மாற்றப்பட்டு விட்டது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (முன்பு உதவி கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோரும் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் ஆகியோருக்கு கீழும் பணியாற்றுவார்கள். அரசுபள்ளிகளில் 6-வது வகுப்பில் இருந்து ஆங்கிலவகுப்பு பல பள்ளிகளில் உள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. அவ்வாறு ஆங்கில வகுப்புகள் கொண்டுவந்தால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
இப்போதைய நிலையில் 65 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக எழுத்துத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடும். இந்த தகவலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment