rp

Blogging Tips 2017

மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.

ங்கீகாரம்இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.இயக்குனர் பிச்சை பேசியதாவது: அங்கீகாரம் இல்லாத, மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரத்திற்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு உடல், மன ரீதியாக தண்டனை அளிக்கக் கூடாது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு பிச்சை பேசினார்.

No comments:

Post a Comment


web stats

web stats