rp

Blogging Tips 2017

வாக்காளர் சேர்ப்பு பணியில் ஆசிரியர்கள்

: வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான மனுக்களைப்பெற, ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1.1.2014 ம் தேதியை தகுதி நாளாக்கொண்டு, 18 வயது நிரம்பிய, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, இன்றும் (அக்.,6) அக்.,20 மற்றும் 27 ல் நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க(படிவம் 6), பெயர் நீக்கம் செய்தல்(படிவம் 7), திருத்தம் மேற்கொள்ளுதல்(படிவம் 8), ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல்(படிவம் 8"ஏ') ஆகியவற்றுக்கான மனுக்களை, பொதுமக்கள் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில், தரவேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட, அப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர், அதை பெற்று, சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்புவர். ""மனுவிலுள்ள விபரங்கள், சரிபார்க்கப்பட்ட பின், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats