rp

Blogging Tips 2017

பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை நியமிக்க அரசு அனுமதி


பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை இளநிலை உதவியாளர்களாக நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

கருணை அடிப்படையில் வேலை

தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின் போதே இறந்தால் அவர்களின் குடும்பத்தை பாதுகாப்பதற்காக அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி கொடுக்கப்படுகிறது. இந்த பணி வழங்கப்படுவதால் அந்த குடும்பம் வறுமையில் இருந்து விடுபட்டு வாழ வழிவகை செய்யப்படுகிறது.

அதன்படி இறந்தவர்களின் வாரிசுகள் 10-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட உள்ளது.

504 பேர்

பள்ளி கல்வித்துறையில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகள் 504 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே பதிவு செய்துள்ள கருணை அடிப்படையில் வேலைக்காக காத்திருப்போர் பட்டியலை சரிபார்க்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

சீனியாரிட்டி பட்டியல்

இதைத்தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் பட்டியலை சரிபார்த்து பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்புவார்கள். அவர்களில் சீனியாரிட்டி உள்ளவர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

விரைவில் 504 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment


web stats

web stats