தமிழகத்தில் உள்ள அரசுத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்:
அரசால் நடப்பு நிதியாண்டில் ரூ.50.89 கோடி செலவில், 10 புதிய அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.500 மாத
உதவித் தொகை, மடிகணினிகள், மிதிவண்டிகள், சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைவு உபகரணங்கள் போன்ற பல்வேறு சலுகைகளை அரசு விரிவு படுத்தியுள்ளது.
இதில் படிக்கும் மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைப் பெறும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியைப் பயன்படுத்தி, ரூ.50 கோடி செலவில் மாநிலத்தில் உள்ள அரசுத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களும் நவீனமயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment