Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழக பட்ஜெட் 2014 -2015 : முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். 2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயக்கப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்:
காவல்துறைக்கு 5186.20 கோடி நிதி ஒதுக்கீடு.
காவல்துறை குடியிருப்புகள், கட்டடங்கள் கட்ட 571.67 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ. 100 கோடி செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சாலைகள் மேம்பாட்டு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ. 2800 கோடி ஒதுக்கீடு.
சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு மொத்தம் ரூ. 215 கோடி ஒதுக்கீடு.
இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் ரூ. 1260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை நவீனப்படுத்த ரூ.189.65 கோடி ஒதுக்கீடு.
ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
நீதிமன்றங்களுக்கு ரூ.783.02 கோடி நிதி ஒதுக்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடப்பு நிதியாண்டில் ரூ.681 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னையில் வரிவசூல் செய்ய 10 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சிக்கென ரூபாய் 39.29 கோடி நிதி ஒதுக்கீடு. 4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
அணைகள் புனரமைப்புக்கு ரூ. 329.65 கோடி ஒதுக்கீடு.
கூட்டுறவு அமைப்புகளுக்கு பயிர்க்கடனாக ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 323 கோடி ஒதுக்கீடு.
நடப்பு நிதியாண்டில் கோழி வளர்ப்புக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
திருந்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கரில் விரிவுப்படுத்தப்படும்.
2014-15ல் உணவு மானியம் ரூ. 5,300 கோடியாக உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment


web stats

web stats