தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2014-2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவையில் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து முடித்ததும், பேரவை நிகழ்ச்சி அத்துடன் ஒத்திவைக்கப்படும். இதையடுத்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடக்கும். அதில், பட்ஜெட் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். பட்ஜெட் மீதான விவாதம் வரும் 17ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது.
விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிப் பார்.அதன்பின் பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.மேலும், 2013- 14ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை 20ம்தேதியும், 2014-15ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை களை 21ந் தேதியும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 4வது பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment